சக்குடி - பூவந்தி ரோட்டில் போலீஸ் வாகனம் மோதியதில் டூ வீலரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் அனஞ்சியூர் கிராமத்தில் தங்கம்மாள் என்ற மூதாட்டி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்க மதுரை மாவட்டம் சிட்டம்பட்டியில் இருந்து உறவினர் பிரசாத் 25, தனது மனைவி சத்யா 20, மகன் தஷ்வந்த 2, ஆகியோருடன் டூ வீலரில் வந்துள்ளார். இறுதி சடங்கில் பங்கேற்று விட்டு மீண்டும் டூ வீலரில் மதுரை நோக்கி சக்குடி வழியாக சென்றுள்ளனர்.
இதில் சோனை ஈஸ்வரி 25, என்பவரும் டூ வீலரில் கூடுதலாக பயணம் செய்துள்ளார். அனஞ்சியூர் விலக்கு அருகே இரவு 7.30 மணிக்கு வந்த போது எதிரே சிவகங்கை இன்ஸ்பெக்டர் ஜெயராணி (ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு OC) தனது போலீஸ் வாகனத்தில் டிரைவர் பாலமுருகனுடன் வந்த போது டூ வீலர் மீது போலீஸ் வாகனம் மோதி வலது புறம் போய் சரிவில் இறங்கி நின்றது. இதில் பிரசாத் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சத்யா, தஷ்வின், சோனை ஈஸ்வரி திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் அதிர்ச்சி... தீப்பற்றி எரிந்த தனியார் பேருந்து... 29 பயணிகளின் நிலை என்ன?
இதில் சத்யாவும், தஷ்வினும் வரும் வழியில் உயிரிழந்தனர். சோனை ஈஸ்வரி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்ததால் உறவினர்கள் சம்பவ இடத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை -பூவந்தி - சிவகங்கை ரோட்டில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகங்கை எஸ்பி சிவபிரசாத், டிஎஸ்பி பார்த்திபன் உறவினர்களை சமாதானம் செய்தனர். ஈடுபட்டனர். விபத்து குறித்து பூவந்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதனிடையே திருப்புவனம் அரசு மருத்துவமனையிலும் பிரசாத்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பகீர் காட்சிகள்...!! காலையிலேயே பயங்கரம்... வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள் ...!