போலியோ, அல்லது இளம்பிள்ளைவாதம் என்று அழைக்கப்படும் இந்த கொடிய நோய், குழந்தைகளின் இடுப்பு, கால்கள் மற்றும் கைகளை பாதித்து, முடக்கு நிலைக்கு இட்டுச் செல்லும் ஒரு தொற்று நோயாகும். போலியோ சொட்டு மருந்து, வாய் வழி போலியோ தடுப்பூசி என்று அழைக்கப்படுகிறது. இந்த இலவச சொட்டு மருந்து அளிக்கும் திட்டத்தை குறிப்பிட்ட நாளில் மாநில அரசுகள் அல்லது ஆட்சிப் பகுதி நிர்வாகங்கள் செயல்படுத்துகின்றன. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையம், தொடருந்து நிலையம், விமான நிலையம், வழிபாட்டுத் தலம், பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் போன்ற பகுதிகளில் இதற்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில், இந்த தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன, மேலும் Universal Immunization Programme கீழ், பிறந்ததிலிருந்து 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படுகின்றன. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, 0, 6, 10, 14 வாரங்களிலும், 16-24 மாதங்களிலும் கொடுக்கப்படுகிறது,

தமிழ்நாட்டில் போலியோ முகாம்கள் 1995-96ஆம் ஆண்டு தொடங்கின. உலக சுகாதார அமைப்பு மற்றும் ரொட்டரி இன்டர்நேஷனலின் ஆதரவுடன் முகாம்கள் நடத்தப்படுகின்றன. 2024ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி நடந்த கடைசி முக்கிய முகாம், 57.84 லட்சம் குழந்தைகளை இலக்காகக் கொண்டது, மேலும் 43,051 மையங்களில் நடைபெற்றது.
இதையும் படிங்க: #weatherupdate: குடை கொண்டு போங்க மக்களே...வெளுக்க போகுது மழை... 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...!
செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. தாம்பரம் திருநீர்மலையில் நடந்த இடத்தில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருத்து வழங்கி, அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதையும் படிங்க: காவிரி நதிநீர் பங்கீடு... 44வது கூட்டம் தொடக்கம்... தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?