முன்னாள் அமைச்சர் பொன்முடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, பெண்கள் குறித்தும், சைவ வைணவ மதங்கள் குறித்தும் மிகவும் கீழ்த்தரமாக பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பொன்முடியிடம் இருந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
தொடர்ந்து பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் பதவியில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். மேலும், பொன்முடி மீது சைவம் மற்றும் வைணவம் குறித்து இழிவாகப் பேசியதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இது கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது என்றும், மக்கள் பிரதிநிதியாக அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொன்முடிக்கு உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்றும் அவர் மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்திருந்தார். மேலும் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்! அப்போ வாசனுக்கு?! இபிஎஸ் முடிவால் தேஜ கூட்டணியில் சலசலப்பு!

தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, சர்ச்சைக்குரிய வகையில் பொன்முடி பேசியது தொடர்பாக டிஜிபி மற்றும் காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நீரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொன்முடி மார்ச் 24ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சைவ வைணவ சமயங்களை அவமதிக்கும் வகையில் பேசிய பொன்முடி மீது வழக்கு பதிய கோரி பாஜக கவுன்சிலர் தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தொடர்க வழக்கில் உன்னுடைய நேரில் ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அன்புமணிக்கு ஷாக்...!! - ராமதாஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி... ஒரே நாளில் தலைகீழாக மாறிய நிலை...!