• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அப்பாடா... ரிலாக்ஸான பொன்முடி.. சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு என்ன..??

    சைவ வைணவ சமயங்கள் பெண்கள் குறித்து வெறுப்பு பேச்சு பேசியதாக பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
    Author By Editor Tue, 16 Sep 2025 18:49:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ponmudi-case-chennai-high-court-judgement

    முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ-வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் பேசிய பொன்முடி, சைவ-வைணவ மதங்களை அவமதிக்கும் விதமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    Chennai High Court

    இதையடுத்து, பொன்முடி பகிரங்க மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டார். இருப்பினும், அவரது தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்படவில்லை, இது பொதுமக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பலர் இந்த நடவடிக்கையை “கண்துடைப்பு” என விமர்சித்து, அவரது அமைச்சர் பதவியையும் உடனடியாக பறிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். மேலும் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெகநாத் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

    இதையும் படிங்க: பொன்முடிக்கு எதிரான வழக்கு.. காவல்துறைக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு என்ன..??

    பொன்முடி மீது 2006-2011 ஆட்சிக்காலத்தில் சொத்துக் குவிப்பு மற்றும் செம்மண் குவாரி முறைகேடு வழக்குகள் உள்ளன. 2023 டிசம்பரில், சென்னை உயர் நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவித்து, மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனால், அவர் தனது எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் பதவிகளை தற்காலிகமாக இழந்தார். ஆனால், உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, 2024 மார்ச்சில் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

    தற்போது, ஆபாச பேச்சு சர்ச்சை மற்றும் மக்கள் எதிர்ப்பு காரணமாக, பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில், பொன்முடி கடந்த ஏப்ரல் 27ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, அமைச்சரவையில் புதிய இலாகா ஒதுக்கீடுகள் மற்றும் மனோ தங்கராஜின் மறுநியமனம் அறிவிக்கப்பட்டது.

    இதனிடையே பொன்முடியின் ஆபாச பேச்சு விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. நீதிபதி என். சதீஷ் குமார் அமர்வில் நடைபெற்ற விசாரணையில், காவல்துறை தரப்பில், புகார்கள் மீது விசாரணை நடத்தி முகாந்திரம் இல்லை என முடித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீதிபதி, “புகார்களில் முகாந்திரம் இல்லை என எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது?” எனக் கேள்வி எழுப்பினார். 

    பொன்முடியின் பேச்சு 1972-ல் சமூக சீர்திருத்தவாதி ஒருவரின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது என அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கினார். இதையடுத்து, பொன்முடியின் முழு பேச்சு வீடியோ மற்றும் 1972-ன் கருத்துகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

    Chennai High Court

    இந்நிலையில் பொன்முடி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. அவருக்கு எதிராக தனிநபர் புகார் தாக்கல் செய்து கொள்ளலாம். புகார்களை காவல்துறையினர் முடித்து வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி இதுபோன்ற பேச்சை தவிர்த்திருக்க வேண்டும். காவல்துறை குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடம் முறையான விசாரணை நடத்தி இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: மதுரை ஆதீனம் விவகாரம்: நாட்டுல எவ்வளவோ விஷயம் இருக்கு.. இத பெருசாக்கிட்டீங்க.. சென்னை ஐகோர்ட் கருத்து..!!

    மேலும் படிங்க
    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    தமிழ்நாடு
    மாளவிகா மோகனனுக்கு தொடர்ந்து தோல்வி..!! ‘சர்தார் 2’ நம்பிக்கையும் போச்சு.. இனி விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் புதிய படமாவது கைகொடுக்குமா..!

    மாளவிகா மோகனனுக்கு தொடர்ந்து தோல்வி..!! ‘சர்தார் 2’ நம்பிக்கையும் போச்சு.. இனி விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் புதிய படமாவது கைகொடுக்குமா..!

    சினிமா
    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்!” விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி வாழ்த்து!

    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்!” விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல்! கடலில் குதித்த மாலுமிகள்! 13 பேர் மீட்பு! ஒருவர் மாயம்!

    இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல்! கடலில் குதித்த மாலுமிகள்! 13 பேர் மீட்பு! ஒருவர் மாயம்!

    இந்தியா
    ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்! ஆதிக்கம் செலுத்தும் பாஜக! 7 மாநகராட்சிகளில் முன்னிலை... காங்கிரசுக்கு 2 இடங்கள்!

    ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்! ஆதிக்கம் செலுத்தும் பாஜக! 7 மாநகராட்சிகளில் முன்னிலை... காங்கிரசுக்கு 2 இடங்கள்!

    அரசியல்
    விஜய் சேதுபதியின் அரசியல் பேச்சு சர்ச்சை..!! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கும் விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு..!

    விஜய் சேதுபதியின் அரசியல் பேச்சு சர்ச்சை..!! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கும் விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு..!

    சினிமா

    செய்திகள்

    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    தமிழ்நாடு
    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்!” விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி வாழ்த்து!

    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்!” விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல்! கடலில் குதித்த மாலுமிகள்! 13 பேர் மீட்பு! ஒருவர் மாயம்!

    இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல்! கடலில் குதித்த மாலுமிகள்! 13 பேர் மீட்பு! ஒருவர் மாயம்!

    இந்தியா
    ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்! ஆதிக்கம் செலுத்தும் பாஜக! 7 மாநகராட்சிகளில் முன்னிலை... காங்கிரசுக்கு 2 இடங்கள்!

    ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்! ஆதிக்கம் செலுத்தும் பாஜக! 7 மாநகராட்சிகளில் முன்னிலை... காங்கிரசுக்கு 2 இடங்கள்!

    அரசியல்
    விநாயகர் சதுர்த்தியில் மதுரைக்கு வந்த புதிய வரவு! மீனாட்சி அம்மன் கோவிலில் ‘துர்கா’ யானை!

    விநாயகர் சதுர்த்தியில் மதுரைக்கு வந்த புதிய வரவு! மீனாட்சி அம்மன் கோவிலில் ‘துர்கா’ யானை!

    தமிழ்நாடு

    "விநாயகர் சதுர்த்தி"..! 32 அடி சங்கடஹர சதுர்த்தி பிள்ளையாருக்கு வண்ண மலர் அலங்காரம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share