தமிழ் சினிமா உலகின் ஒரு முக்கியமான முகமாக, பல்வேறு பாதைகளைத் தாண்டி வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் பி.டி. செல்வகுமார். 1970 ஜனவரி 1 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த இவர், தனது தொழில் வாழ்க்கையை பத்திரிகைத்துறையில் தொடங்கி, பிஆர்.ஓ., தயாரிப்பாளர், இயக்குனர் எனப் பல பாதைகளைப் பயணித்து, சமூக ஆர்வலராகவும், அரசியல் விளையாட்டாளராகவும் உருவெடுத்துள்ளார்.
விஜயின் 27 ஆண்டுகால நெருக்கமான தோழன், அவரது படங்களின் பி.ஆர்.ஓ. ஆகவும் மேலாளராகவும் இருந்த செல்வகுமார், 'புலி' படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும், அந்தப் படத்தின் தோல்வி அவரது வாழ்க்கையில் ஒரு தீவிரமான திருப்பத்தை ஏற்படுத்தியது. கஜினி', 'போக்கிரி', 'வில்லு' போன்ற விஜயின் பல வெற்றி படங்களின் பின்னணியில் இருந்து செயல்பட்டார்.

அவரது கடுமையான மேலாண்மை, தொழில்நுட்ப அறிவு, மற்றும் தொடர்பு வலையமைப்பு, சினிமா உலகில் அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தது. விஜயின் படங்கள் வெளியாகும் போது, அவரது பி.ஆர். உத்திகள் திரைப்படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. இந்தக் காலகட்டத்தில், செல்வகுமார் வெறும் மேலாளராக மட்டுமல்ல, விஜயின் நெருக்கமான நண்பராகவும் இருந்தார்.
இதையும் படிங்க: நினைத்ததை செய்ய முடியல..! பரப்புரையில் PTR பழனிவேல் தியாகராஜன் வருத்தம்..!!
முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார் செல்வகுமார். இந்த நிலையில் திமுகவிலிருந்து விலகியுள்ளார். வாரிசுகள், பண பலம் படைத்தவர்களுக்கே திமுகவில் சீட் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் வரவிடமாட்டார்கள் என்றும் திமுகவில் இருந்து விலகிய பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குப்பை அள்ளுவதில் கூட ஊழல்..! கையாலாகாத திமுக அரசு... முதல்வரை வெளுத்த அண்ணாமலை..!