• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வங்கி ஊழியர்கள் போராட்டம்... நிதியமைச்சர் தலையிட வேண்டும்..! கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    சுட்டி வங்கி ஊழியர்களின் போராட்டத்தை சுட்டிக்காட்டி கிருஷ்ணசாமி முக்கிய கோரிக்கையை முன் வைத்தார்.
    Author By Nila Sat, 26 Sep 2026 14:31:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Puthiya tamilagam krishnasamy

    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, வங்கி ஊழியர்களின் தொடர் போராட்டம் தொழில்களையும் சேவைகளையும் முடக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாகவும், மத்திய அரசு மெத்தனமாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாகத் தலையிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே செப்டம்பர் 11ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தியிருந்தனர்.

    மீண்டும் செப்டம்பர் 28 முதல் 30 வரை மூன்று நாள் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில் அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.இன்றைய காலகட்டத்தில் வங்கி சேவை தினசரி தொழிலாளர்கள் முதல் பெருந்தொழில் நிறுவனங்கள் வரை மிக இன்றியமையாததாகிவிட்டது. குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்ற விதி அமலில் உள்ள நிலையில், 99.9 சதவீதப் பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலமே நடைபெற வேண்டியுள்ளது.

    Krishnasami

    எனவே வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தங்களால் வங்கிகள் அடிக்கடி செயல்படாமல் போவதால் அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். தொழில் மற்றும் சேவை வளர்ச்சிகள் முடங்கும் அபாயமும் உருவாகி வருகிறது.ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்ட நோக்கங்கள் முறையாக நிறைவேறவில்லை. மெல்ல மெல்ல தனியார் வங்கிகள் பெருகத் தொடங்கியுள்ளன. பல நேரங்களில் அரசு வங்கிகளைக் காட்டிலும் தனியார் வங்கிகளின் சேவை சிறப்புற இருப்பதாகக் கூட நிலை உருவாகியுள்ளது. எனவே அரசு வங்கிகளின் சேவையை மேம்படுத்தி அவற்றை வலுப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.அரசின் எல்லா நிறுவனங்களையும் அந்நிய நாட்டு முதலீட்டுக்குத் திறந்துவிட முடியாது; கூடாது. அது குறிப்பிட்ட காலகட்டத்தில் மிகப்பெரிய ஆபத்தாக மாறும். எல்லாவிதமான தரவுகளும் வங்கிகள் மூலமாக அந்நியச் சக்திகள் கபளீகரம் செய்யக்கூடிய பெரும் ஆபத்தும் உள்ளது.

    இதையும் படிங்க: மாட்டுக் கறியா.? அமைச்சரவையே பார்க்க முடியாது..! வன்னியரசுக்கு கிருஷ்ணசாமி பகிரங்க எச்சரிக்கை..!

    வங்கி ஊழியர்களின் செயல்பாட்டில் ஏற்படும் சில குறைபாடுகளைக் களைவதற்குப் பதிலாக அதைக் காரணம் காட்டி யாருக்கோ இந்திய மக்களின் உழைப்பைச் சுரண்ட வாய்ப்பளித்துவிடக் கூடாது.அரசு வங்கி ஊழியர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்புடையவையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ள முடியாது. குறிப்பாக பெரும்பாலான தினசரி பணிகளை அவுட்சோர்சிங் என்ற பெயரில் தாரைவார்ப்பது ஏற்புடையதல்ல. வங்கி ஊழியர்கள் பற்றாக்குறை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமாகும். எனவே இதுபோன்ற நியாயமான கோரிக்கைகளை அரசு கனிவுடன் அணுகித் தீர்த்துவைக்க வேண்டும்.பிற அரசு அலுவலகங்களைப் போல வாரத்தில் ஐந்து நாள் மட்டுமே வேலை என்பது ஏற்புடைய கோரிக்கையாகத் தோன்றவில்லை. மத்திய, மாநில அரசு அலுவலகங்களை ஐந்து நாள் வேலை அறிவித்ததன் விளைவாக பொதுமக்கள் தங்களுக்கான சேவைகளை முறையாகப் பெற முடியாத மோசமான நிலை இந்தியா முழுவதும் உருவாகியுள்ளது.

    எனவே வங்கிகள் சனிக்கிழமை இயங்க வேண்டியது கண்டிப்பாக அவசியம். இந்த ஒரு கோரிக்கையை விட்டுவிட்டு, வங்கி ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, வங்கிப் பணிகளை அவுட்சோர்சிங் முறைக்குத் தாரைவார்ப்பதைத் தடுப்பது, வங்கிகளில் 20 சதவிகித நேரடி அந்நிய முதலீட்டை கைவிடுவது போன்ற முக்கியமான கோரிக்கைகளைப் பரிசீலித்துத் தீர்வு காண வேண்டியது மிக அவசியம்.வங்கி ஊழியர்களின் தொடர் போராட்டம் மற்றும் முடக்கத்தால் வளர்ந்து வரும் இந்தியாவின் பொருளாதார வேகம் குறைந்துபோக அல்லது பின்னோக்கிப் போவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாகத் தலையிட்டு உடனடியாக அனைத்து வங்கி ஊழியர் சம்மேளனங்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, இனிமேல் வங்கி ஊழியர்களின் போராட்டம் நடைபெறாத வண்ணம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: கூழுக்கும் ஆசை... மீசைக்கும் ஆசையா.? டாஸ்மாக்கை விட்டொழி..! கிருஷ்ணசாமி தாக்கு.!!

    மேலும் படிங்க
    கற்பூர நாயகியே!! தமிழ் பக்திப் பாடலுடன் பிரதமர் மோடியின் நவராத்திரி வாழ்த்து! சென்னை வரும்முன்னே சிக்சர்!!

    கற்பூர நாயகியே!! தமிழ் பக்திப் பாடலுடன் பிரதமர் மோடியின் நவராத்திரி வாழ்த்து! சென்னை வரும்முன்னே சிக்சர்!!

    தமிழ்நாடு
    ஏர்போர்ட்டுக்கே நேரில் சென்ற முதல்வர் விஜய்! பிரதமர் மோடியை வரவேற்கத் தயார்… பாதுகாப்பு வளையத்தில் சென்னை!

    ஏர்போர்ட்டுக்கே நேரில் சென்ற முதல்வர் விஜய்! பிரதமர் மோடியை வரவேற்கத் தயார்… பாதுகாப்பு வளையத்தில் சென்னை!

    அரசியல்
    குழந்தைகள் தினத்தில் மாணவர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ்? ₹9.27 கோடி கேக் வழங்கத் திட்டம்?

    குழந்தைகள் தினத்தில் மாணவர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ்? ₹9.27 கோடி கேக் வழங்கத் திட்டம்?

    அரசியல்
    மூத்த தலைவர்களை ஓரங்கட்டுகிறாரா ராகுல் காந்தி? காங்கிரஸில் புதிய மாற்றம்! பிரியங்காவின் வியூகம்!

    மூத்த தலைவர்களை ஓரங்கட்டுகிறாரா ராகுல் காந்தி? காங்கிரஸில் புதிய மாற்றம்! பிரியங்காவின் வியூகம்!

    அரசியல்
    அக். 13-ல் உருவாகிறது புயல் சின்னம்? வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் மழை எப்போது?

    அக். 13-ல் உருவாகிறது புயல் சின்னம்? வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் மழை எப்போது?

    தமிழ்நாடு
    பெண் குழந்தைகள் தினம்! முதல்வர் விஜய் வெளியிட்ட உருக்கமான வாழ்த்து! முக்கிய வேண்டுகோள்!

    பெண் குழந்தைகள் தினம்! முதல்வர் விஜய் வெளியிட்ட உருக்கமான வாழ்த்து! முக்கிய வேண்டுகோள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share