நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 (இன்று) முதல் ஆகஸ்ட் 12 வரை டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மத்திய அரசு வரி விதிப்பு, விளையாட்டு, கல்வி, சுரங்கம், கப்பல் போன்ற துறைகள் தொடர்பாக 8 முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் பல முக்கிய பிரச்சினைகளை எழுப்பவும், அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் வியூகம் வகுத்துள்ளன. பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள், மற்றும் பணவீக்கம் போன்ற முக்கிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளன. சில மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக பகல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மக்களவை கடும் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையிலிருந்து விமான போக்குவரத்து துறை அமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தான் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் கூட்டணி எம்பி.களுக்கே பேச அனுமதி அளிக்கப்படுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். பொதுவாக, இந்திய நாடாளுமன்றத்தில், குறிப்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மைக்ரோபோன்கள் அணைக்கப்படுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுவதுண்டு. இது எதிர்க்கட்சிகளால் அரசு மற்றும் அவைத் தலைவர்களின் பக்கச்சார்பு நடவடிக்கைகளாக விமர்சிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு... ஜாமீன் வழங்கி லக்னோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இத்தகைய குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில், குறிப்பாக மழைக்கால மற்றும் குளிர்காலக் கூட்டத் தொடர்களில், முக்கிய விவகாரங்கள் குறித்த விவாதங்களின் போது எழுகின்றன. இன்றைய தினம் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனக்கு பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு இது மட்டும் தான் கரெக்ட்டா வரும்.. விளாசிய ராகுல் காந்தி..!