வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களுக்கு அதிக அளவில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அருவிகள் உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. நீர் நிலைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி விட்டதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து மழை அதிக அளவு பெய்த மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, மழை நீரை அகற்றுவது, அடிப்படை வசதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசித்தார். அப்போது மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். தற்காலிக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: #BREAKING: தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…! அப்போ சென்னைக்கு?
நிவாரண முகாம்ங்களில் அத்தியாவசிய பொருட்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மழைநீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: தீவிரமடையும் பருவமழை... நேரடியாக களமிறங்கிய முதல்வர்... ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை...!