''செல்போன் யுகத்தில் நாட்டின் அருமை, பெருமை குறித்து இளைஞர்களுக்கும், சில பெரியவர்களுக்கும் தெரியவில்லை. மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சிக்காக தியானம், யோகா, இயற்கையான வாழ்க்கை என இந்திய கலாச்சாரத்தை தேடி வருகின்றனர்.
செல்போன் யுகத்தில் இளைஞர்கள் பாரத நாட்டின் கலாச்சாரம், பெருமைகள் தெரியாமல் உள்ளனர். இன்றைய இளைஞர்கள் நமது கலாச்சார பெருமையை பற்றிய அறிவில்லாமல் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள்.
மேற்கத்திய நாட்டு மக்கள் அவர்களது கலாச்சாரத்தில் நிம்மதி கிடைக்கவில்லை என இந்தியா வருகிறார்கள். நாட்டின் உன்னதமான கலாச்சாரம் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்'' எனத் தெரிவித்துளார்.

இதையும் படிங்க: விடவே கூடாது.. கனவிலும் நினைத்து பார்க்காத தண்டனை.. தீவிரவாத தாக்குதலுக்கு ரஜினி ஆவேசம்.!
இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள பலரும், ''இப்போ பாருங்க… இந்த wokes கும்பல் ரஜினி மேல் விழுந்து அவரை நாலு நாள் பிராண்டும். ரஜினி சொல்வது உண்மை… மேற்கத்திய நாடுகள் பெரிய அளவில் தங்களை சுய பரிசோதனை செய்து கொண்டு இருக்கிறார்கள். பாரத நாட்டின் பலம், அதன் கலாச்சாரம், குடும்ப அமைப்பு என்கிற வாழ்வியல்.
மேற்கத்திய நாடுகளில் பெற்றோர்கள் பிள்ளைகள் மேற்படிப்பிற்கு செலவு செய்வதில்லை பெரிய அளவில்… 12th முடித்ததும் அவர்களே பலர் வேலை செய்துதான் படிக்கிறார்கள். அதனால் அதிக பள்ளியோடு படிப்பை நிறுத்துகிறார்கள்.

பிள்ளைகள் பெற்றோர்களுக்கு கடைசி வரை சோறு போடும் கான்செப்ட் எல்லாம் இல்லை… அதனால் பலருக்கு முதுமையில் தனிமை. பலர் கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழ்க்கை நடத்துகிறார்கள் (living together) கல்யாணம் ஆனாலும் நீண்டகாலம் ஒன்றாக வாழ்வதில்லை. அதனால் பல குழந்தைகள் சிங்கிள் பேரண்டாடு தவிக்கிறார்கள்.
பலர் குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. நாய்கள் பூனைகள் போதும் என வாழ்கிறார்கள். இதனால் அந்தந்த நாடுகள் population decline ஐ சந்திர்க்கிறது. இதனால் வேலைப்பளு குறைகிறது. நாட்டின் பொருளாதாரம் பாதிக்கிறது.

ஆனால் இவனுங்களுக்கு இதெல்லாம் இங்கேயும் நடக்கவேண்டும் என்பதுதானே ஆசை? அதனால் காலாச்சாரம் எல்லாம் ஒன்றும் இல்லை. பார்ப்பனியம் அது எது என அதை மட்டப்படுத்தி, இளைஞர்களை அதோ கேவலமாக நினைக்க வைப்பதுதான் ஒரு கும்பலின் குறிக்கோள். ரஜினி இதை பேசியதற்கு அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பதவியை உதறிய கையோடு... ரஜினி ஸ்டைலில் அதிரடி முடிவெடுத்த அண்ணாமலை... கசிந்தது பரபரப்பு தகவல்...!