அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் இடையிலான பிரச்சனை பூதாகரமாக வெடித்து உள்ளது. முகுந்தனை கட்சியில் இளைஞரணி பாரதி கொடுத்ததால் தொடர்ந்த பிரச்சனை இன்று வரை ஓயவில்லை. அதற்குள் அவரது ராமதாஸின் மகளும் அன்புமணியின் சகோதரியும் ஸ்ரீகாந்தியை செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க செய்தனர். அன்புமணி தரப்பு தனியாகவும் ராமதாஸ் தரப்பு தனியாகவும் செயற்குழு, நிர்வாக குழு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அன்புமணி தரப்பில் நடத்தப்படும் கூட்டத்தில் ராமதாஸ் மீது குற்றம் சாட்டப்படுவதும் ராமதாஸ் நடக்கும் கூட்டத்தில் அன்புமணிக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதுமாக போய்க்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில், மகள் ஸ்ரீகாந்திக்கு பாமகவில் தற்போதைக்கு பதவி அளிக்கப்படாது என்று ராமதாஸ் கூறியுள்ளார். ராமதாஸ் தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் ஸ்ரீகாந்திக்கு மேடையில் இடம் அளிக்கப்பட்ட நிலையில் சகோதரருக்கு எதிராக சகோதரி ஸ்ரீகாந்தியை களமிறக்கி விட்டார் ராமதாஸ் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். தற்போதைக்கு மகள் ஸ்ரீகாந்திக்கு பாமகவை பதவி அளிக்கப்படாது என்று கூறியுள்ளார்.

தற்போதைக்கு பதவி அளிக்கப்படாது என்று தான் கூறியிருக்கிறார் தவிர எப்போதும் பதவி அளிக்கப்படாது என்று ராமதாஸ் கூறவில்லை என்பது அரசியலை பேச பொருளாக இருக்கிறது. இந்த நிலையில் தன் பேச்சைக் கேட்காதவர்கள் தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் எனவே அன்புமணி எனது பெயரை பயன்படுத்தவே கூடாது வேண்டுமென்றால் இனிஷியலுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளட்டும் என தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் நடந்த ஒருங்கிணைந்த மாவட்ட பாமக கூடப் பகுதியில் ராமதாஸ் இவ்வாறு பேசி இருப்பதால் அன்புமணி தரப்பினரிடையே அதிருதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஐந்து வயது குழந்தை போல் தான் செயல்பட்டு வருவதாக கூறுகிறார்கள் என்று ராமதாஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: என் பொண்ணு ஶ்ரீகாந்திக்கு இப்போதைக்கு பதவி இல்ல.. ஆனா அப்புறம்? ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்..!
இதையும் படிங்க: குடுமிபிடி சண்டை! தேர்தல் ஆணையத்திற்கே சென்ற பாமக பஞ்சாயத்து.. இரு தரப்பும் பதவிக்கு போட்டா போட்டி..!