ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டை பெற்றுக்கொண்டு நூற்றுக்கணக்கான மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தொடர்ச்சியாக ராமேஸ்வரம் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையை கைது செய்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் தற்போது ஒரு விசைப்படவையை ஐந்து மீனவர்களையும் கைது செய்திருக்கின்றனர்.
முன்றாவது முறையாக தொடர்ச்சியாக தற்போது இந்த கைது நடவடிக்கையான இந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது ராமேஸ்வரம் மீனவர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
எல்லை தாண்டி மீம்ப்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு மற்றும் ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து நெடுந்தீவு கடல் பகுதியில் வைத்து விசாரணை
இதையும் படிங்க: வழக்கறிஞர் கொலையில் திடீர் திருப்பம்... கூலிப்படையுடன் சரண்டர் ஆன முக்கிய புள்ளி...!
இலங்கை பருத்தித்துறை கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் அட்டூழியத்தில் ஈடுபட்டு இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்துவிட்டு சென்றதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த நிலையில், தற்போது தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: மக்களே ரொம்ப கவனமா இருங்க... வீட்டை விட்டு வெளியே வராதீங்க... வெளியானது பரபரப்பு எச்சரிக்கை..!