• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பெண்ணியம் பேசும் விஜயிடம் கண்ணியம் இருக்கா? - கட்சிக்குள் இருந்தே விஜய்க்கு வந்த ஸ்ட்ராங் வார்னிங்...!

    பெண்ணியம் பேசும் விஜயிடம் கண்ணியம் இருக்கிறதா? என்று ரஞ்சனா நாச்சியார் விஜயிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார். 
    Author By Amaravathi Mon, 09 Mar 2026 09:19:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ranjana-nachiyar-slams-vijay

    தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின கொண்டாட்டம் நேற்று முன்தினம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. அப்போது மகளிருக்கான பல்வேறு சிறப்பு திட்டங்களை வெளியிட்ட விஜய், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எழுந்துள்ள பிரச்சனை குறித்தும் பேசினார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். அது worth ஏ இல்லை.. தேவையின்றி நீங்க கஷ்டப்படாதீங்க.. நீங்க கஷ்டப்படுறத பார்த்தா எனக்கு கஷ்டமாக இருக்கிறது" என்று கூறினார். 

    இந்த சூழலில் சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ரஞ்சனா நாச்சியார் ஒரு அறிக்கை வாயிலாக தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அந்த கண்டனத்தில பெண்ணியம் பேசும் உங்களிடம் கண்ணியம் உள்ளதா என்று வினா எழுத்திருக்கிறார். தமிழக வெற்றி கழகம் சார்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு அந்த மேடையில் தலைவர் பல கருத்துக்களை பகிர்ந்திருந்தார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நிலவி வரும் பிரச்சனையை நேரடியாக சொல்லாமல் கோடிட்டு காட்டும் விதத்தில் குறிப்பிட்டிருந்தது. அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். அது ஒர்த்தே இல்லை என்று கூறியிருந்தார். 

    அந்த ஒரு வாக்கியம் தான் இன்று பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. எது ஒர்த் இல்லை தலைவா? உங்கள் மனைவியா அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் ஒரு அரசியல் தலைவர் பேசும் ஒவ்வொரு சொல்லும் ஒரு குடும்பத்தை மட்டும் ஒலிக்காது, அது ஒரு சமூகத்தின் மனதிலும் ஒலிக்கும். உங்கள் மனைவியை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுகள் பேசப்படும் நேரத்தில், "வீட்டிற்கு ஆறு சிலிண்டர் இலவசமாக தருகிறேன்" என்று மேடையில் பேசுவது ஒரு கடுமையான முரண்பாடாக தெரியவில்லையா?

    இதையும் படிங்க: “வெத்து வேட்டு”... விஜய் தேர்தல் அறிக்கையை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் கீதா ஜீவன்...!

    ஒரு பக்கம் பெண்கள் உயர்வு பற்றி பேசுகிறீர்கள். மற்றொரு பக்கம் பெண்களின் மரியாதையை காக்கும் மொழி கூட உங்கள் வார்த்தைகளில் காணப்படவில்லை என்றால், அந்த அரசியல் எதற்காக? உங்கள் உண்மை முகம்தான் என்ன ? உங்களை தெய்வமாகக் கருதி வாழும் உங்கள் ரசிகர்கள், குறிப்பாக இன்றைய Gen-Z தலைமுறையினர், சமூக ஊடகங்களில் என்ன பேசுகின்றனர் தெரியுமா? "எங்கள் தலைவன் ஏழு பொண்டாட்டி கட்டுவான், அதில் தவறு இல்லை" என்று எழுதுபவர்கள் இருக்கின்றனர். "நான் உனக்கு பொண்டாட்டியாக வருகிறேன்; உன் மனைவியை விட்டு விலகிவிடு" என்று எழுதும் பதிவுகளும் இருக்கின்றன.

    இந்த மனநிலை எங்கே இருந்து வந்தது? ஒரு தலைவரின் சொல் ஒரு ரசிகனின் முழக்கமாக மாறும். ஒரு தலைவரின் செயல் ஒரு இளைஞனின் நடத்தை ஆகிவிடும். "தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே" என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா? ஒரு நடிகையை கூட்டிக்கொண்டு பொது வெளியில் வரும்போது, அதை பார்த்து இன்றைய இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்? "திருமணத்திற்கு பின்பு நாமும் இப்படியே வாழலாம்" என்ற எண்ணம் அவர்களிடம் விதைக்கப்படாதா? இது தான் நம் தமிழ் கலாச்சாரமா? தமிழ் பண்பாடு பெண்களை பொருளாக பார்க்கவில்லை. 

     தமிழ் மரபு பெண்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களை உயர்த்தியது. நம் கலாச்சாரம் என்ன சொல்கிறது? இழவு வீட்டிற்கு சென்று கேதம் கேட்பதே நம் பண்பு. அன்பும் மரியாதையும் காக்கும் வாழ்வே நம் வழி. துயரத்தில் இருக்கும் குடும்பங்களிடம் சென்று, அவர்களின் கண்ணீரை துடைப்பதே தமிழர் மரபு. இது தான் நம் கலாச்சாரமா? அவர்களின் துயரத்தை பகிர்ந்து கொள்வதே மனிதநேயத்தின் அடையாளம். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை, அவர்கள் துயரத்தில் இருக்கும் அந்த நேரத்தில், அவர்களையே உங்கள் இடத்திற்கு வரவைத்து இரங்கல் தெரிவித்தீர்கள். 

    இது தான் தமிழர் பண்பாட்டின் வழியா? துயரத்தில் இருக்கும் மனிதர்களிடம் செல்வதே மரபு, அவர்களை அழைத்து வருவது மரபல்ல. அதையும் 'பரவாயில்லை" என்று ஏற்றுக்கொண்டு விட்டுவிட்டதால் இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறி விட்டது. ஒரு தலைவர் உருவாக்கும் நடைமுறை, நாளைய அரசியலின் ட்ரெண்டாக மாறிவிடும். அதனால் தான் நான் கேட்கிறேன் -தமிழக அரசியலில் நாம் உருவாக்க வேண்டியது மரபை மதிக்கும் கலாச்சாரமா? அல்லது மரபை மாற்றும் மோசமான ட்ரெண்ட் செட்டிங்களா? தமிழர் கலாச்சாரம் மரியாதையை கற்றுக் கொடுத்தது. அந்த மரியாதையை காக்கும் அரசியல் தான் தமிழகத்திற்கு தேவையான அரசியல் அந்த மரபை மாற்றும் வழியில் நாம் போகக் கூடாது. 

    எனது மூதாதையரான வேலுநாச்சியாரை கொள்கைத் தலைவராக கூறிக்கொண்டு, பெண்ணியம் பேசும் நீங்கள், உங்கள் சொந்த வாழ்க்கையிலும் அந்த கண்ணியத்தை காக்க வேண்டாமா? பெண்ணியம் என்பது மேடையில் முழக்கம் அல்ல. வாழ்க்கையில் ஒழுக்கம். பெண் என்பது ஒரு உறவு மட்டும் அல்ல. ஒரு மரியாதை. இன்றைய Gen-Z தலைமுறையின் பெற்றோர்கள் கூட, உங்கள் செயல்-பேச்சுகளை பார்த்து மெதுவாக கவலைப்படத் தொடங்கியுள்ளனர். நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் இயக்கம், தலைவரின் தனிப்பட்ட ஒழுக்கம் காரணமாக தேய்ந்து போகக் கூடாது. அது உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் புறக்கணிக்கிறீர்களா? "பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமனாக சீர் கொடுப்பேன்" என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அது நல்ல எண்ணம். ஆனால் அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா ? நீங்கள் சீர் கொடுக்க வேண்டாம் தலைவா இளைஞர்களை சீர் குலைக்காமல் இருப்பதே சிறந்தது. 

    ஒரு தலைவர் சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒரு தலைவர் உருவாக்கும் கலாச்சாரம் தான் ஒரு தலைமுறையை உருவாக்கும். TVK ல் உங்களுடன் இணைந்து பயணிக்கும் நான் அக்கறையுடன் எச்சரிக்க வருகிறேன். மோசமான ட்ரெண்ட் செட்டராக மாறிவிடாதீர்கள். தமிழக இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாகவே இருங்கள். நம் மதிப்பையும் மரியாதையும் நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், அந்த மரியாதையை உயர்த்தவோ அல்லது மெதுவாகக் குறைக்கவோ செய்கிறது. சரியோ தவறோ அதைப் பற்றி பேசாமல் மௌனம் காப்பது அறிவுடைமை அல்ல. 

    சமுதாயத்திற்கு நாம் செய்யும் துரோகம். ஏனெனில் மௌனம் பல நேரங்களில் ஒப்புதலாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அதனால் நம் மரபையும், நம் மதிப்பையும், நம் மரியாதையையும் காக்க தேவைப்படும் போது குரல் கொடுப்பதே ஒரு பொறுப்புள்ள சமூகத்தின் அடையாளம் மேலும் ஒரு தலைவனின் பண்பு. தமிழக வெற்றிக்கழகத்தில் பயணித்துக்கொண்டே இதை நான் சுட்டிக்காட்டாவிட்டால் அது நம் கழகத்துக்கும், மக்களுக்கும், உங்களை நம்பியிருக்கும் இளைஞர்களுக்கும் நான் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும் என சகட்டுமேனிக்கு சொந்த கட்சி தலைவரையே கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளார். 
     

    இதையும் படிங்க: ஒரு பவுன் நகையுடன் அண்ணன் சீர்… பொதுப் போக்குவரத்தில் PANIC பட்டன்..! வாக்குறுதியில் சிக்ஸ் அடித்த விஜய்..!!

    மேலும் படிங்க
    ராஜ்யசபா எம்.பிக்கள் தேர்தல்!  தமிழக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு!!

    ராஜ்யசபா எம்.பிக்கள் தேர்தல்! தமிழக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு!!

    இந்தியா
    ஈரான் -இஸ்ரேல் , அமெரிக்கா போர்! மேற்காசியாவில் நிலவரம் என்ன?  பார்லி.,யில் ஜெய்சங்கர் விளக்கம்!

    ஈரான் -இஸ்ரேல் , அமெரிக்கா போர்! மேற்காசியாவில் நிலவரம் என்ன? பார்லி.,யில் ஜெய்சங்கர் விளக்கம்!

    இந்தியா
    புதுச்சேரி: அக்கவுண்டில் கிரெடிட்டான ரூ.5,000..!! குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத் தலைவிகள்..!!

    புதுச்சேரி: அக்கவுண்டில் கிரெடிட்டான ரூ.5,000..!! குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத் தலைவிகள்..!!

    இந்தியா
    அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை..!! பஞ்சாப் அரசு அதிரடி அறிவிப்பு..!!

    அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை..!! பஞ்சாப் அரசு அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியா
    பிஞ்சு குழந்தை முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை..! கதறல் சத்தம் நெஞ்சை கிழிக்குது..!! சீமான் கண்டனம்

    பிஞ்சு குழந்தை முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை..! கதறல் சத்தம் நெஞ்சை கிழிக்குது..!! சீமான் கண்டனம்

    தமிழ்நாடு
    10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு... மாலை சந்திப்போம்..! முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!!

    10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு... மாலை சந்திப்போம்..! முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ராஜ்யசபா எம்.பிக்கள் தேர்தல்!  தமிழக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு!!

    ராஜ்யசபா எம்.பிக்கள் தேர்தல்! தமிழக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு!!

    இந்தியா
    ஈரான் -இஸ்ரேல் , அமெரிக்கா போர்! மேற்காசியாவில் நிலவரம் என்ன?  பார்லி.,யில் ஜெய்சங்கர் விளக்கம்!

    ஈரான் -இஸ்ரேல் , அமெரிக்கா போர்! மேற்காசியாவில் நிலவரம் என்ன? பார்லி.,யில் ஜெய்சங்கர் விளக்கம்!

    இந்தியா
    புதுச்சேரி: அக்கவுண்டில் கிரெடிட்டான ரூ.5,000..!! குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத் தலைவிகள்..!!

    புதுச்சேரி: அக்கவுண்டில் கிரெடிட்டான ரூ.5,000..!! குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத் தலைவிகள்..!!

    இந்தியா
    அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை..!! பஞ்சாப் அரசு அதிரடி அறிவிப்பு..!!

    அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை..!! பஞ்சாப் அரசு அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியா
    பிஞ்சு குழந்தை முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை..! கதறல் சத்தம் நெஞ்சை கிழிக்குது..!! சீமான் கண்டனம்

    பிஞ்சு குழந்தை முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை..! கதறல் சத்தம் நெஞ்சை கிழிக்குது..!! சீமான் கண்டனம்

    தமிழ்நாடு
    10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு... மாலை சந்திப்போம்..! முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!!

    10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு... மாலை சந்திப்போம்..! முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share