ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில் நடந்த ஒரு திருமண விருந்தின்போது, 'ரஸ்கல்லா' தொண்டையில் சிக்கியதால், 41 வயதான நபர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள மாலியந்தா கிராமத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் பங்கேற்ற 41 வயதான லலித் சிங், உணவில் பரிமாறப்பட்ட ரசகுல்லாவை ரசித்து ருசித்து சாப்பிட்டுள்ளார். அப்போது ரசகுல்லா அவரது தொண்டையில் சிக்கியதால் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
ரசகுல்லாவை ருசித்த சில வினாடிகள் கழித்து, அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அவரைச் சுற்றி நின்றவர்கள் அவரது தொண்டையில் சிக்கியிருந்த ரசகுல்லாவை அகற்ற முயன்றனர். ஆனால் அது பலனளிக்காததால், லலித் சிங்கின் தந்தை அவரை அருகிலுள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதையும் படிங்க: உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!
மருத்துவர்களின் கூற்றுப்படி, ரசகுல்லா அவரது சுவாசப் பாதைகளை முழுவதுமாக அடைத்ததால், அவரது உடலுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் விநியோகம் தடைபட்டது. இதனால், லலித் சிங் சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார் எனத் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு சிங்கின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!