தமிழ்நாடு ›

பெரும் மோதல் ஏற்பட வாய்ப்பு… சேலத்தில் உச்சக்கட்ட பதற்றம்… குவிந்த போலீஸ்….!

சேலத்தில் பேனர் விவகாரத்தில் அதிமுக, திமுகவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல்நிலை ஏற்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேருந்து  நிலையம் அருகே அதிமுக பேனர் கிழிக்கப்பட்டதால் 
திமுக, அதிமுக இரு கட்சியினர் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பு தொண்டர்களும் பெரும் அளவில் குவிந்ததால் பதற்றத்தை தணிக்க போலீசார் குவிந்தனர். 

சேலம் மாவட்டம் ,  இடங்கணசாலை நகர அதிமுக சார்பில் இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி மற்றும் திமுக அரசின் மின் கட்டணம், பால் விலை உயர்வு உள்ளிட்டவை குறித்து பேனர் வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என குறிப்பிட்டு அதிமுகவினர் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.

இதனைத் பார்த்து ஆத்திரமடைந்த திமுகவினர் பேனரை கிழித்துள்ளனர். இதனை அறிந்த அதிமுகவினர் அங்கு திரண்டு வந்ததால், திமுகவினர் மற்றும் அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதையும் படிங்க: “இபிஎஸ் தான் முதல்வர் ஆனா…” – NDA கூட்டணிக்குள் குண்டு வைத்த நயினார்… அமைச்சரவைக்கு காத்திருக்கும் ஆப்பு…!

இதனை அறிந்த மகுடஞ்சாவடி  போலீசார் விரைந்து வந்து அங்கு கூடியிருந்த இரு கட்சியினரை கலைய செய்தனர். மேலும், இரு கட்சி நேரடிய மோதல் ஏற்பட வாய்ப்பு இருந்ததால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது இடங்களில் பேனர் வைப்பதற்கான அனுமதி பெற்ற பிறகு வைக்கப்பட வேண்டும் என  காவல்துறை சார்பில் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: தாறுமாறாக லத்தியால் தாக்கிய போலீஸ்..! துருப்பிடித்த ஸ்டாலின் கரம்… தவிப்பது மக்கள்தானே? அதிமுக விளாசல்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी