சேலத்திலிருந்து புறநகர் பகுதிகளில் இயக்குவதற்காக 25 புதிய பேருந்துகள் தற்போது சேலம் ஜான்சன்பேட்டை போக்குவரத்துக் கழகக் கிளை அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளன.
இந்த 25 புதிய பேருந்துகளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியின் நிறங்களான மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் பூசப்பட்ட நிலையில் உள்ளன. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, சமூக வலைதளங்களில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. பொதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் என்றாலே நீலம், பச்சை உள்ளிட்ட பொதுவான நிறங்களில் இருப்பது வழக்கம்.
இதையும் படிங்க: பெண் பிள்ளைகள் படிக்கும் அரசு பள்ளியில் அட்ராசிட்டி... தலைமையாசிரியரை அடிக்க பாய்ந்த தவெக நிர்வாகியால் பரபரப்பு...!
ஆனால், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு தற்போது வந்துள்ள இந்தப் புதிய பேருந்துகள் அனைத்தும் அந்தக் கட்சியின் கொடியின் நிறங்களான மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில் வந்திருக்கின்றன.
இந்த 25 பேருந்துகளும் தற்போது மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் கலந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியின் அமைப்பில் இருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, இந்த 25 பேருந்துகளும் சேலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஜான்சன்பேட்டை கிளை அலுவலகத்தில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் இந்தப் பேருந்துகள் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன.
இந்த நிலையில்தான், இந்தப் பேருந்துகள் அனைத்திற்கும் தமிழக வெற்றிக் கழகக் கொடியின் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டிருப்பது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, சமூக வலைதளங்களிலும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அரசு இதைக் கவனிக்குமா, உற்று நோக்குமா என்ற கேள்வியும் அதிகாரிகள் மத்தியிலும், ஓட்டுநர்கள் மத்தியிலும் எழுந்திருக்கிறது.
இதையும் படிங்க: தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?