சென்னையில் தூய்மை பணியாளர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அவர்களுக்கு உரிய விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தேர்தலுக்கு முன்பாக தூய்மை பணியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தற்போது ஆட்சி அமைத்த பிறகு தங்களையும் நேரில் சந்தித்து, தங்களது கோரிக்கைகளை கேட்டறிய வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வலுக்கும் போராட்டம்... தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை.!
இது தொடர்பாக, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருந்தார். முதலமைச்சர் ஏன் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து பேசவில்லை என்றும், அவர்களுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தூய்மை பணியாளர்களுடன் மூன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
அதன்படி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகிய மூன்று அமைச்சர்கள் இன்று காலை 11.30 மணிக்கு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தூய்மை பணியாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
தூய்மை பணியாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தினசரி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே அமைச்சர் ராஜ்மோகனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை இன்று மூன்று அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: போராட இடம் ஒதுக்குவது பெருமையா..? தூய்மை தேவதைகள்... புகழ்ந்தால் போதுமா CM.. TTV தினகரன் காட்டம்..!