தூய்மை பணியாளர்கள் போராட்டம் 100வது நாளை எட்டியதை அடுத்து ரிப்பன் மாளிகை அடுத்து தலைமைச் செயலகம் செல்லும் வழியிலும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பாக காவலர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியில் இருக்கக்கூடிய மண்டலம் ஐந்து மற்றும் 6-யைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும், மீண்டும் பழைய முறைப்படி தங்களை பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ரிப்பன் மாளிகை வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இந்த போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், இன்று அந்த போராட்டம் 100வது நாளை எட்டி இருக்கிறது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ரிப்பன் மாளிகை வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 13ம் தேதி நள்ளிரவு காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். அதற்கு பிறகு இரண்டு மண்டலங்களையும் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்த போதும் அவர்களை காவல்துறையினர் ஆங்காங்கே வைத்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: எங்களுக்கு வேண்டாம்! SIR தமிழ்நாட்டுக்கு பாதகம்... திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...!
இந்த நிலையில் தான் கடந்த நான்கு மாதங்களாக தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது, பிள்ளையின் பள்ளி செலவுகளுக்கு கூட காசு இல்லாமல், வாடகை கொடுப்பதற்கு கூட காசு இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம் என தூய்மை பணியாளர்கள் கூறி வந்தனர்.
இதனிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த இரண்டு மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மெரினா கடலில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். அப்போதும் அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கக்கூடிய நிலையில் அந்த இரண்டு மண்டலங்களிலுமே வழக்கமான எண்ணிக்கையில் இருக்கக்கூடிய தூய்மை பணியாளர்களை காட்டிலும் மிக குறைவான அளவிலே தூய்மை பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் மீண்டும் தங்களை பழைய முறைப்படி பணி அமர்த்த வேண்டும். அதேபோல அந்த இரண்டு மண்டலங்களிலுமே தனியார் மையத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் நடத்தி வரக்கூடிய போராட்டம் 100வது நாளை எட்டிய இருக்கிறது. இதனால் தலைமை செயலகம், கலைஞர் நினைவிடம், உழைப்பாளர் சிலை, ரிப்பன் மாளிகை, கொளத்தூர் சட்டமன்ற அலுவலகம் உள்ளியிட்ட ஐந்திற்கு மேற்பட்ட இடங்களில தூய்மை பணியாளர்கள் தங்களுடைய போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின.
ரிப்பன் மாளிகைக்கு வெளியேயும் உள்ளேயும் காவலர்கள் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல மெரினா கடற்கரை பகுதிகள், தலைமை செயலகம், உழைப்பாளர் சிலை ஆகிய இடங்களிலுமே காவலர்கள் தற்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல் தலைமை செயலகம் செல்லும் வழி எங்கிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தலைமைச் செயலகம் செல்லக்கூடிய மாநகர பேருந்துகளில் ஏறி யாராவது சந்தேகத்திற்குரிய நபர்கள் இருக்கிறார்களா? தலைமைச் செயலகத்திற்கு வெளியே சென்று யாராவது போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளார்களா? தொடர்ந்து சோதனை இட்டு வருகின்றனர். இதற்காக தலைமைச் செயலகம் கூடிய அனைத்து சாலைகளிலும் தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நாள் அப்பகுதியில் பரபரப்பு நிலை வருகிறது.
இதையும் படிங்க: டிரம்ப் பண்றது எதுவுமே புடிக்கல.. "HE MUST GO NOW"..!! வாஷிங்டன்னில் போராட்டத்தில் குதித்த மக்கள்..!!