தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி சீமான் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். பல்வேறு சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்தி பேசுவார். ஒவ்வொரு பிரச்சினையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சீமான் களத்தில் நிற்பதை பார்த்திருப்போம். அதேபோல், திராவிடம் என்ற பாரம்பரியத்தின் மையத்தில், ஒரு வேறுபட்ட குரல் எழுந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது திராவிடத்துடனான முரண், வெறும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது.
அது தமிழர் அடையாளத்தின் அடிப்படையை மீண்டும் வரையறுக்கும் ஒரு தீவிரமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. சீமானின் இந்த நிலைப்பாடு, திராவிடத்தை போலி கோட்பாடு என்று குற்றம்சாட்டி, அதன் ஆழமான சமூக-அரசியல் பாதிப்புகளை அம்பலப்படுத்த முயல்கிறது. சீமானின் அரசியல் பயணம், திராவிட இயக்கத்தின் செல்வாக்கிலிருந்து தொடங்கியது.

ஆனால், காலம் செல்லச் செல்ல, சீமானின் பார்வை மாறியது. திராவிடம் தமிழின் தனித்தன்மையை மறைக்கிறது என்று அவர் விமர்சித்து வருகிறார். பல்வேறு சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்தி சீமான் பேசுவது வழக்கம். இன்று போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறி வாழ்த்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை தனி ஆளில்ல!! தமிழ் தேசியத்தின் மகன்!! தாக்கரே சகோதரர்கள் மிரட்டலுக்கு சீமான் பதிலடி!!
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போகி பண்டிகை வாழ்த்துக்களை பகிர்ந்தார். அதில், தமிழ்த்தேசியப் பெருநெருப்பு கொண்டு தமிழ்நாட்டில் மண்டி கிடக்கும் திராவிடக் குப்பையை எரித்து போகியைக் கொண்டாடுவோம் என்று கூறினார். திராவிடத்தை முற்றிலும் எதிர்த்து வரும் சீமான், போகி பண்டிகையில் திராவிடக் குப்பையை எரித்து போகியை கொண்டாடுங்கள் என்று கூறி இருப்பது பேசு பொருளாக மாறியது.
இதையும் படிங்க: என்ன பாத்தா அரசுக்கு பயமா? போராடும் ஆசிரியர்களை ஒடுக்குவது தான் உங்க மாடலா... கிழித்து தொங்கவிட்ட சீமான்..!