தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரியலூர் மாவட்டத்தில் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாகப் பெய்த பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், நனைந்தபடியே அவர் ஆற்றிய உரை தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.
அரியலூரில் சீமான் பேசத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பலத்த கோடை மழை பெய்யத் தொடங்கியது. மேடையிலிருந்தவர்கள் குடை பிடிக்க முன்வந்தும், அதனை மறுத்துவிட்டுத் தொண்டர்களோடு சேர்ந்து தானும் மழையில் நனைந்தபடியே தனது உரையைத் தொடர்ந்தார். அவரது இந்தச் செயல் அங்கிருந்த பொதுமக்களையும், கட்சியினரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சீமான் மழையில் நனைவதைக் கண்ட தொண்டர் ஒருவர் ஆவேசமாக, அண்ணா.. நீங்கள் வந்த ராசி, நீங்கள் வந்ததால்தான் மழை பெய்கிறது! என்று சத்தமாகக் கத்தினார். இதைக் கேட்டுப் புன்னகைத்த சீமான், நல்லோர் பொருட்டும் பெய்யும்தான்... வள்ளுவர் பேரன் என்பது தெரியும் இல்லையா? என்று தனது பாணியில் பதிலளித்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தார்.
இதையும் படிங்க: மூட்டை மூட்டையாக பரிசு பொருட்கள்... திமுகவினரை கையும் களவுமாக பிடித்த தேர்தல் அதிகாரிகள்..!!
சமூக வலைதளங்களில் இது குறித்து விவாதங்கள் எழுந்த நிலையில், சீமான் குறிப்பிட்ட நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்ற புகழ்பெற்ற வரிகள் உண்மையில் சங்ககாலப் புலவர் ஔவையார் இயற்றிய மூதுரை நூலில் இடம்பெற்றுள்ள பாடலாகும். சீமான் தன்னை வள்ளுவர் பேரன் என்று அழைத்துக்கொள்வதால், இந்தப் பாடலையும் வள்ளுவருடையது எனத் தவறாகக் குறிப்பிட்டது சுட்டிக்காட்டப்பட்டது.
வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கணித்திருந்தபடி, இன்று அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கோடை மழை வெப்பத்தைத் தணித்திருந்தாலும், சீமானின் வருகையும் பேச்சும் தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது. அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்குப் பெருந்திரளான மக்கள் முன்னிலையில் அவர் ஆதரவு திரட்டினார்.
இதையும் படிங்க: உங்ககிட்ட கத்தி கத்தி சாகுறதுக்கு ஒரேடியா போயிடலாம்..! பரப்புரையில் சீமான் ஆதங்கம்..!!