தமிழக வெற்றி கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழ்நாட்டை இதற்கு முன் ஆண்டவர்களும் பாஜகவிற்கு அடிமையாக தான் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தற்போது ஆள்பவர்களும் பாஜகவிற்கு அடிமையாக தான் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
மாற்றி மாற்றி ஓட்டு போட்டு ஏமாந்த மக்கள் நம்மை நம்புவதாக தெரிவித்தார். நம்மை நம்புபவர்களுக்காக நாம் நன்றியோடு இருக்க வேண்டும் அல்லவா என்று கேட்டார். அரசியலுக்கு வந்ததற்கு பிறகும் சரி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகும் சரி ஊழல் செய்யவே மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். ஒரு பைசா தொடமாட்டேன்., அது எனக்கு அவசியமே கிடையாது என்று கூறினார்.

என்ன சூழ்ச்சி செய்தாலும் என்ன அழுத்தம் கொடுத்தாலும் அடங்கிப் போவதோ அல்லது அண்டிப் பிழைப்பதோ அல்லது அடிமையாக இருப்பதற்கோ அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். நேற்றைய தினம் விஜய் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்து பேசினார். வீட்டிற்கு ஒரு ஓட்டு என்ற அடிப்படையில் விஜய் பேசி இருப்பதாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்றும் வாயிலேயே வடை சுடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்கு பார்த்தாலும் போராட்டம்..! இனி எப்போதும் திமுக ஆட்சி இல்லை..! இபிஎஸ் திட்டவட்டம்..!
கரூரில் 41 பேர் உயிரிழந்த போது அவர்களை பனையூருக்கு வரவழைத்து பேசிய விஜயின் அரசியலை என்ன சொல்வது என்றும் இப்போதே இப்படி செய்கிறார்களே ஒரு வேலை மாற்றம் வந்தால் என்னெல்லாம் செய்வார்கள் என்று கேட்டார். அந்த கட்சி இருக்குமா என்று தனக்கு தெரியவில்லை எனவும் கூறினார். ஊழல் பற்றி விஜய் பேசியதை குறிப்பிட்ட செல்லுர் ராஜு, ஆதவ் அர்ஜுனாவை வைத்துக்கொண்டு இப்படி பேசுகிறாரே அவர் யோக்கியமா என்று கேட்டார். கமல்ஹாசனே பரவாயில்லை என்று கூறிய அவர், விஜய் கொடுப்பது எல்லாம் பில்டப் தான் என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: தாய்மொழி வழி கல்வியை சிதைத்த திராவிட மாடல் அரசு...! சீமான் கடும் கண்டனம்..!