தமிழக அரசியலில் புதிய அலை என்று அழைக்கப்படும் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உள்ளார். தனது கட்சியை முன்னிலைப்படுத்தி 2026 இல் முதல்வர் அரியணையில் ஏறுவதை நோக்கமாகக் கொண்டு களமாடி வருகிறார். விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இளைய சமுதாயத்தின் வரவேற்பு அதிகளவு இருந்தது. திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மாற்றாக விஜய் இருப்பார் என்று சொல்லப்பட்டது.
ஏற்கனவே விஜய்க்கு முறையான வழிகாட்டுதல் கொடுக்க அனுபவம் வாய்ந்த நபர்கள் இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. விஜயின் தேர்தல் திட்டமிடுதலில் குறைபாடுகள் இருப்பதாகவும் அரசியல் அனுபவசாலிகள் யாரும் இல்லாததால் தான் இது போன்ற குறைபாடுகள் ஏற்படுவதாகவும் விமர்சிக்கப்பட்டது. இதற்கெல்லாம் பதில் கொடுத்தும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தின் இணைந்தார். அவருக்கு கட்சி பொறுப்புகள் வழங்கப்பட்டன. விஜய் 2026ல் நிச்சயம் வெற்றி பெறுவார் என செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.
இதையும் படிங்க: இப்படியே போனா முழுநிலவு அமாவாசை ஆகிடும்… நிர்வாகிகள் நீக்கம் குறித்து செங்கோட்டையன் சாடல்…!
அப்போது, ஆட்சிப் பீடத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை அமர வைக்க நிச்சயம் பாடுபடுவேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் புதியவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிவித்தார். ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழ்நாடு வெற்றி நடை போட அயராது உழைப்போம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: விஜய்க்கே தளபதியான செங்கோட்டையன்... தற்கொலைக்கு சமமான முடிவு... மாஜி அமைச்சர் எச்சரிக்கை...!