தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தார் என்றும் இதனால் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தொண்டர்கள் சோர்வடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார். அப்போது, விஜய்க்கு சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.

கேட்ட இடத்தில் அனுமதி கொடுக்கவில்லை என்று கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர், லைட் ஹவுஸ் கார்னரில் அதிகபட்சமாக 7000 பேர் தான் நிற்க முடியும் என்றும் எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை முடிவு செய்ய வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை என்று தெரிவித்தார். வேலுச்சாமிபுரம் தான் சரியான இடம் என்றும் குறிப்பிட்டார். ஜெனரேட்டர் அறைக்குள் தொண்டர்கள் சென்றதாகவும் அதனால்தான் ஜெனரேட்டர் அணைக்கப்பட்டதாகவும், மின்வெட்டு நிகழவில்லை எனவும் குறிப்பிட்டார். பிரசாரத்துக்கு வரும் தொண்டர்களுக்கு போதிய உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட கட்சிகளின் கடமை என்றும் ஆனால் விஜய் தாமதமாக வந்ததால் தண்ணீரில் இல்லாமல் தொண்டர்கள் சோர்வடைந்ததாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏன் LATE? எதுக்கு உள்ள போனீங்க? விஜய்க்கு செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி…!
விஜய் இடமே தண்ணீர் கேட்ட காட்சிகளை நம்மால் பார்க்க முடிகிறது எனவும் கூறினார். சம்பவம் நடந்த இடத்தில் ஆயிரம் செருப்புகள் இருந்தது என்றும் ஆனால் காலி பாட்டில்கள் எங்காவது இருந்ததா எனவும் கேள்வி எழுப்பினார். இதுதான் கரூர் சம்பவத்தின் நிலை எனவும் பேசினார். காழ்புணர்ச்சியின் காரணமாக ஆளும் அரசின் மீது பழி சுமத்தப்படுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முழு முயற்சி மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் பேசும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதா? ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி…!