தமிழ்நாட்டின் பன்முக சமூக திணிப்புகளில் நரிக்குறவர் சமூகம் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. பாரம்பரியமாக வேட்டையாடி வாழ்ந்து, சிறு வணிகங்களில் ஈடுபட்ட இந்த சமூகம், நீண்ட காலமாக புலம்பெயர் வாழ்க்கை முறையில் தவித்து வந்துள்ளது. இன்றைய உலகில், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் வீட்டு உரிமை ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசு, நரிக்குறவர்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், இலவச வீடுகள் கட்டும் திட்டம் ஒரு முக்கியமான அங்கமாகத் திகழ்கிறது. ஆனால் தங்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறி, இதுவரை எதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிவகங்கையில் நரிக்குறவர்கள் குற்றம் சாட்டி உள்ளன.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீடு கட்டி தர கோரி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இடம் நரிக்குறவர் இன மக்கள் மனு அளித்தனர். கழனிவாசல் பகுதியில் வசித்தோரை வேடன் நகருக்கு மாற்றிவிட்டு வீடு கட்டி தரவில்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தரைப்பாலத்தில் கிடந்த தலையில்லாத முண்டம்... காணாமல் போன இளைஞர் வழக்கில் திருக்கிடும் திருப்பம்...!
2024 ஆம் ஆண்டு பட்டா வழங்கிய நிலையில் வீடு கட்டி தரவில்லை என துணை முதலமைச்சர் உதயநிதியிடம் நரிக்குறவர் இன மக்கள் புகார் தெரிவித்தனர். நரிக்குறவர் இன மக்கள் வீடு கட்டி தரக்கோரி மனு அளித்த நிலையில் நடவடிக்கை எடுப்பதாக துணை முதல்வர் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து, நரிக்குறவர் இன மக்கள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாசிமணிகளை அணிவித்தனர். அதனை மகிழ்ச்சியுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: திருட்டுத் தேர்தல் ஆணையம்… மோடியும், அமித் ஷாவும் பக்கா திருடர்கள்…! ஆ.ராசா கடும் விமர்சனம்..!