• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    காசா, ஈரான் மீதான தாக்குதல்.. இந்தியா அமைதி காக்கக்கூடாது.. சோனியா காந்தி கருத்து..!

    காசா, ஈரான் மீதான தாக்குதல் விவகாரத்தில் இந்திய அரசு பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
    Author By Editor Sat, 21 Jun 2025 14:15:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sonia-gandhi-about-israel-attack-issue

    காசா, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் இந்திய அரசு அமைதி காப்பது நமது தார்மீக மற்றும் ராஜதந்திர வழக்கங்களை விட்டு விலகுவதற்கு சமமாகும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் நாளிதழில் ‘It is still not too late for India’s voice to be heard’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்திருப்பதாவது;

    attack

    "காசாவில் ஏற்பட்ட பேரழிவு குறித்தும், தற்போது ஈரானுக்கு எதிரான தாக்குதல் குறித்தும் இந்திய அரசு அமைதி காப்பது நமது தார்மீக மற்றும் ராஜதந்திர வழக்கங்களை விட்டு விலகுவதற்கு சமமாகும். இது நமது குரல் மட்டுமின்றி, நமது மதிப்புகளையும் இழப்பதைப் போன்றதாகும்.

    இதையும் படிங்க: சோனியா காந்தி இப்ப நல்லா இருக்காங்க.. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..!

    இத்தகைய மனிதாபிமான பேரழிவு ஏற்பட்டுள்ள சூழலில், இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரத்தில் 'இரு-நாடு' தீர்வுக்கான இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான உறுதிப்பாட்டை நரேந்திர மோடி அரசாங்கம் கைவிட்டுவிட்டது.

    இனிமேலும் தாமதிக்காமல் இந்தியா தெளிவாக தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். மேற்கு ஆசியாவில் பதற்றத்தை தணித்து, பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க அனைத்து தூதரக வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும். பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    attack

    ஜூன் 13, 2025 அன்று, ஈரான் மற்றும் அதன் இறையாண்மைக்கு எதிராக இஸ்ரேல் சட்டவிரோதமான தாக்குதலை தொடங்கியபோது, ஒருதலைப்பட்ச ராணுவ தாக்குதலின் ஆபத்தான விளைவுகளை உலகம் மீண்டும் ஒருமுறை கண்டது. இது பிராந்திய மற்றும் உலகளாவிய அளவில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். ஈரானில் நடந்த இந்த குண்டுவெடிப்புகளையும், படுகொலைகளையும் இந்திய தேசிய காங்கிரஸ் கண்டித்துள்ளது.

    பொதுமக்களின் உயிர்கள் மற்றும் பிராந்திய அமைதியை முற்றிலும் புறக்கணித்து காசா மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களைப் போலவே, ஈரான் மீதான தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு அமைதியை சீர்குலைப்பதிலும், பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும் நீண்ட வரலாற்று பதிவைக் கொண்டுள்ளது.

    attack

    ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. உண்மைகளை அடிப்படையாக கொண்ட, ராஜதந்திரத்தால் இயக்கப்படும் தலைமையை உலகம் எதிர்பார்க்கிறதே தவிர, வற்புறுத்தல் அல்லது பொய்களால் நிரம்பிய தலைமையை அல்ல.

    ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களில் ஈரான் உறுதியான ஆதரவை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது. 1994-ம் ஆண்டு, காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியாவை விமர்சிக்கும் தீர்மானத்தைத் தடுக்க ஈரான் உதவியது. முன்னதாக 1965 மற்றும் 1971 போர்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த ஈரான் ஏகாதிபத்திய அரசை விட, தற்போதைய ஈரான் இஸ்லாமிய குடியரசு இந்தியாவுடன் நன்றாக ஒத்துழைத்து வருகிறது.

    attack

    இந்தியா-இஸ்ரேல் இடையிலான இருதரப்பு உறவு, போர் பதற்றத்தை தணித்து, அமைதிக்கு வழிவகை செய்ய உதவும் தார்மீக பொறுப்பை நமக்கு வழங்குகிறது. இது சாதாரண கொள்கை மட்டுமல்ல. லட்சக்கணக்கான இந்திய குடிமக்கள் மேற்கு ஆசியா முழுவதும் வேலை செய்கிறார்கள். எனவே அந்த பிராந்தியத்தில் அமைதி நிலவுவது நமது தேச நலன் சார்ந்த விஷயமாக உள்ளது."

    இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
     
    இதையும் படிங்க: சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

    மேலும் படிங்க
    ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்க... அதிரடி காட்டிய கோர்ட்...!

    ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்க... அதிரடி காட்டிய கோர்ட்...!

    தமிழ்நாடு
    கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.. மக்களுக்காக நின்ற ஆர்.பி உதயகுமார் கைது..!!

    கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.. மக்களுக்காக நின்ற ஆர்.பி உதயகுமார் கைது..!!

    அரசியல்
    கரூருக்கு போனீங்களே கள்ளக்குறிச்சிக்கு ஏன் போகல? நீலி கண்ணீர் வடிக்காதீங்க ஸ்டாலின்... விளாசிய இபிஎஸ்..!

    கரூருக்கு போனீங்களே கள்ளக்குறிச்சிக்கு ஏன் போகல? நீலி கண்ணீர் வடிக்காதீங்க ஸ்டாலின்... விளாசிய இபிஎஸ்..!

    தமிழ்நாடு
    மழையால் நடந்த ட்விஸ்ட்.. கடுப்பான ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணி வீரர்கள்..!!

    மழையால் நடந்த ட்விஸ்ட்.. கடுப்பான ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணி வீரர்கள்..!!

    கிரிக்கெட்
    #BREAKING: கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

    #BREAKING: கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

    தமிழ்நாடு
    ச்ச… தவெக என்ன மாதிரியான கட்சி? சம்பவ இடத்திலிருந்து பறந்துட்டாங்க… நீதிபதி ஆவேசம்…!

    ச்ச… தவெக என்ன மாதிரியான கட்சி? சம்பவ இடத்திலிருந்து பறந்துட்டாங்க… நீதிபதி ஆவேசம்…!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share