வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

அரசு பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!

அரசு பள்ளி மாணவர்களை பன்னாடு சுற்றுலா அழைத்து செல்வதை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பல நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் சொல்லும் திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில் மாணவர்களை மலேசியாவிற்கு கல்வி சுற்றுலா அழைத்துச் சென்ற போது விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா சென்றுள்ள நிலையில், அவர்களோடு இணைந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: எங்க பொறுமையைச் சோதிக்காதீங்க.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திருமாவளவன் எச்சரிக்கை.!

அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவர்களை பன்னாடு சுற்றுலா அழைத்து செல்கின்றோம் என்றும் கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் முதல் முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் வாழ்த்துக்களை கூறியதாகவும் அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்துக்கு நிதி கொடுக்க முடியாது.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடியாக அறிவிப்பு..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी