மருத்துவ சான்று கொடுத்து விடுமுறை கேட்டும் நிராகரித்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு போக்குவரத்து அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனித மனம் என்பது உடலின் மிக மென்மையான, அதே சமயம் மிக சிக்கலான பகுதி. வாழ்வின் அன்றாட அழுத்தங்கள், இழப்புகள், தோல்விகள், தனிமை, நிதி நெருக்கடி, உறவுச் சிக்கல்கள், துஷ்பிரயோகம், நோய்கள் – இவையெல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் மனதை நசுக்கத் தொடங்குகின்றன. இந்த நசிவு தாங்க முடியாத அளவுக்கு ஆழமாகும்போது, ஒருவர் தனது வாழ்க்கையையே முடித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆளாகிறார். இது தற்கொலை என்று அழைக்கப்படும் மிகக் கொடூரமான முடிவு.

பெரும்பாலான தற்கொலை முயற்சிகள் திடீர் உந்துதலில் நிகழ்வதில்லை. அது மாதக்கணக்கில், சில சமயம் ஆண்டுக்கணக்கில் மனதிற்குள் குவிந்து வரும் வலியின் வெடிப்பு. ஆனால் ஒரு சில நிமிடங்களில், ஒரு சின்ன தூண்டுதல், ஒரு சண்டை, ஒரு தோல்வி, ஒரு அவமானம் போதுமானதாகி விடுகிறது. அந்தத் தருணத்தில் மனம் முழுவதும் இதற்கு மேல் வாழ்வதை விட இறப்பதே மேல் என்ற ஒரே எண்ணம் மட்டுமே ஆக்கிரமித்திருக்கும். அப்போது வலியை நிறுத்துவதற்கான ஒரே வழி தன்னையே அழிப்பதுதான் என்று தோன்றுகிறது.உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இதையும் படிங்க: தற்கொலைக்கு தூண்டும் CHAT GPT... பாய்ந்தது வழக்குகள்... உஷார் மக்களே..!
மருத்துவ சான்று கொடுத்தும் தனக்கு விடுமுறை அளிக்க மறுத்ததால் போக்குவரத்து கழக அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் அடுத்த மறைமலைநகர் அருகே ரயில் முன் பாய்ந்து மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரி யுவராஜ் விபரீத முடிவு எடுத்துள்ளார். மருத்துவச் சான்றிதழ் அனுப்பி மருத்துவ விடுமுறை கேட்டபோதிலும் A.E. கோவிந்தராஜ் நிராகரித்ததால் யுவராஜ் இந்த விபரீத முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: OpenAI வெளியிட்ட பகீர் தரவுகள்..!! இத்தனை லட்சம் பேர் இத பத்தி பேசுறாங்களா..!!