சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய்யின் பெரியம்மா அமுல் ராஜசேகர், வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவையடுத்து முதலமைச்சர் விஜய், தனது பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அமுல் ராஜசேகர், முதலமைச்சர் விஜய்யின் தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரின் மூத்த சகோதரரின் மனைவி ஆவார். சென்னை நீலாங்கரையில் உள்ள முதியோர் இல்லத்தில் அவர் தங்கியிருந்தார். வயது மூப்பு காரணமாக கடந்த 28-ம் தேதி அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமுல் ராஜசேகரின் மகன்கள் வெளிநாட்டில் வசித்து வருவதால், அவர்கள் சென்னை திரும்பும் வரை அவரது உடல் கடந்த இரண்டு நாட்களாக ஃப்ரீசர் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று முதலமைச்சர் விஜய் தனது பெற்றோருடன் சென்று அமுல் ராஜசேகரின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிங்க: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு செல்லாத விஜய்? பழனிசாமிக்கும் நெருக்கடி! உளவுத்துறை எச்சரிக்கை!
அமுல் ராஜசேகரின் மகன்கள் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த பிறகு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: பாஜக உடன் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! மோடி, அமித் ஷாவுடன் இணக்கம்? காங்கிரசில் அதிருப்தி!