தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த ஐந்தாண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய அறிக்கையை Stalin Statement என்ற பெயரில் விரைவில் வெளியிட உள்ளதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் உங்க கனவை சொல்லுங்க திட்டத்தின் நிறைவாக கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டார். 2030 ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் 5 லட்சம் வீடுகள் மற்றும் நகர்புறங்களில் 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற உறுதி அளித்தார். சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் ஆகியவற்றை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். 1.25 லட்சம் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்படும் என்று கூறினார். நிகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஏக்கர் உயர்த்தப்படும் என்றும் நுண்ணுயிர் பாசனம் 21 லட்சம் ஹெக்டேருக்கு உயர்த்தப்படும் எனவும் அறிவித்தார். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: உங்க வாயால அந்த வார்த்தையா? கொச்சைப்படுத்திடீங்க ஓபிஎஸ்..! தமிழிசை ஆதங்கம்..!!
ஸ்டாலின் ஸ்டேட்மென்ட் நாடகக் காட்சி நிறைவடைந்தது என்று கூறினார். ஸ்டாலின் ஸ்டேட்மென்ட் என்று அமைச்சர்களின் சாதனையை சொல்ல சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின் எப்பொழுது ஸ்டாலின் செட்டில்மெண்ட் மூலம் திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்களை சொல்லப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: மீண்டு வாங்க..! தொடர் சிகிச்சையில் எச். ராஜா...! நேரில் சந்தித்து நலம் விசாரித்த தமிழிசை..!