தமிழக அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் செய்திகளை சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை வேகமாகவும், சரியான தகவல்களை உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன் தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகியோ நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவை ஒருபுறம் இருக்க, தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து கல்யாணசுந்தரம் எம் பி யை பொறுப்பிலிருந்து விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். இந்த இரு சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

தஞ்சை மாவட்ட திமுக செயலாளர் ஆன கல்யாணசுந்தரம் நீக்கம் என்பதை சுட்டிக்காட்டிய தமிழிசை சௌந்தரராஜன் ஒரு பக்கம் திமுக காரர்கள் நீக்கப்பட்டு கொண்டிருப்பதாகவும் மறுபக்கம் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். திராவிட மாடல அரசு எங்கே போகிறது என்ற கேள்வியை முன்வைத்த அவர், தவறான மாடலாகவும் தடுமாறும் மாடலாகவும் தடம் மாறும் அரசாங்கம் தள்ளாடிக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.
நான்காண்டுகளில் செய்யாததை 45 நாட்களில் செய்யப் போகிறார்கள் என்று கூறியுள்ள அவர், இது தமிழ்நாட்டு மக்களின் மீது உள்ள அக்கறையினால் அல்ல என்றும் வருகிற தேர்தலில் உள்ள ஓட்டு மீதான அக்கறை தான் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன் காரணமாக அல்ல தோல்வி பயம் காரணமாக தான் இந்த ஏற்பாடு என்றும் கூறினார்.
இதையும் படிங்க: உங்க தாத்தா காவிய கலைஞரே காவிமயம் ஆனவரு தான்! நீ சின்ன புள்ளப்பா.. உதயநிதியை கலாய்த்த தமிழிசை..!
இதையும் படிங்க: தமிழக அமைச்சர்களுக்கு இறுமாப்பு ஜாஸ்தி! இவங்களா தமிழை காப்பாத்துறாங்க? தமிழிசை சாடல்..!