தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்கள் தொடர்பான பிரச்சனை இன்று பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பார்களுக்கான உரிமக் காலம் முடிவடைந்த நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து பார்களையும் மூட உத்தரவிட்டன. டாஸ்மாக் நிறுவனம் தமிழகம் முழுவதும் சுமார் 4,765 மதுக்கடைகளை நடத்தி வருகிறது. இவற்றில் சுமார் 2,000 முதல் 2,640 வரையிலான கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்கள் செயல்பட்டு வந்தன.
இந்த பார்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாண்டு ஒப்பந்தம் 2026 ஜனவரியில் முடிவடைந்தது. சட்டமன்றத் தேர்தல் காரணமாக அந்த ஒப்பந்தம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நீட்டிப்பு ஜூன் 30, 2026-உடன் முடிவுக்கு வந்தது. உரிமக் காலம் முடிவடைந்ததால், புதிய டெண்டர் அறிவிக்கப்படும் வரை பார்களை மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் இன்று காலை முதல் அல்லது மாலை முதல் பல இடங்களில் பார்கள் மூடப்பட்டதாக அல்லது மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. பார்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உரிமம் முடிந்ததால் டாஸ்மாக் பார்களை இன்றுடன் (ஜூலை 1) மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: திமுக வழியில் தவெக எடுத்த அதிரடி முடிவு... டாஸ்மாக் பார்கள் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...!
டாஸ்மாக் பார்களுக்கான உரிமம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை மூட ஆணை பிறப்பித்தது. காலையில் டாஸ்மாக் பார்களுக்கான உரிமம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் உரிமம் முடிந்ததால் டாஸ்மாக் பார்களை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் கட்டிங்! 90ml 'டெட்ரா பேக்' விற்க முடிவு?! திமுக கைவிட்ட திட்டத்தை கையில் எடுக்கும் தவெக!