தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த புனிதா என்பவர் ஓடைப்பட்டி பேரூராட்சியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவரது கணவர் ஜெகதீசன் இவர் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த தம்பதியினர் சின்னமனூர் மின் நகரில் உள்ள ராஜா என்பவருக்கு சொந்தமான வீட்டில்
வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். அந்த வீட்டில் உரிமையாளர் ராஜா மேல் தளப் பகுதியிலும் ஆசிரியர் தம்பதியினர் கீழ்த்தள பகுதியிலும் வசித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் வழக்கம் போல் இன்று வெளியூரில் இருக்கும் பள்ளிகளுக்கு பணிக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை மேல் தல வீட்டில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் ராஜா வீட்டில் இருந்து வெளியே வந்து கீழ் தளத்தில் இருக்கும் ஆசிரியை வீட்டினை பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோக்கள் திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையும் படிங்க: “போச்சே... போச்சே..” ஆர்.பி.உதயகுமார் நிகழ்ச்சியில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கதறி அழுத தாய்குலம்..!
உடனடியாக வீட்டின் உரிமையாளரான ஆசிரியர் புனிதா மற்றும் அவரது கணவர் ஜெகதீசன்
ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வீட்டிற்கு வந்து பார்த்த ஆசிரியர் புனிதா மற்றும் அவரது கணவர் வீட்டில் படுக்கையறையில் உள்ள பீரோவின் உள்பக்க லாக்கர் உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து சின்னமனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலினை தொடர்ந்து விரைந்து வந்த சின்னமனூர் காவல் நிலைய போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியை புனிதா வீட்டில் இருந்த 66 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பீரோவில் இருந்த ரொக்க பணமும் திருடப்பட்டு உள்ளதாகவும் கூறி புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் அப்பகுதியில் குடியிருப்பவர்களிடம் ஆள் நடமாட்டம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னமனூர் நகர் பகுதியில் பட்டப் பகலில் ஆசிரியை வீட்டில் 66 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: "அப்படியெல்லாம் என்கிட்ட பேசக்கூடாது கம்முனு இரு" - மேடையிலேயே தேமுதிக நிர்வாகியை கண்டித்த பிரேமலதா...!