காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 71 வது மடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேச சர்மா என்பவர் தேர்வு செய்யப்பட்டு இன்று பதவி ஏற்றார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள பஞ்சகங்கா குளத்தில் புதிய மடாதிபதிக்கு சன்னியாச தீட்சை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தற்போது மடாதிபதியாக உள்ள விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆடிட்டர் குருமூர்த்தி, அயோத்தி கோவில் டிரஸ்டி கோவிந்தராஜ் மகரிஷி மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குடும்பத்துடன் பங்கேற்றார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் திடீர் சந்திப்பு.. என்ன காரணம்..?
புதிய மடாதிபதி கணேச சர்மா பஞ்சகங்கா குளத்தில் குளித்து , விஜேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் தீட்சை பெற்றார். இதன் பின் காமாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு ஆதிசங்கரர் சன்னதியில் வருகை தந்து காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு ஊர்வலமாக நடந்து சென்று மடத்தில் 71வது மடாதிபதியாக பொறுப்பேற்றார்.

ஸ்ரீ கணேச சர்மா டிராவிட் ஆந்திர மாநிலம் அண்ணாவரம் ஷேத்திரத்தைச் சேர்ந்தவர். இவருடைய முழு பெயர் துத்து சத்திய வேங்கட சூரிய சுப்ரமணிய கணேச ஷர்மா டிராவிட் என்பதாகும். ஸ்ரீ கணேச சர்மா டிராவிட் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் வேலை செய்து வந்தார். 2006-ம் ஆண்டு முதல் அவர் வேதம் கற்று வருகிறார். காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசியுடன் ரிக், யஜுர், சாம வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றுள்ளார்.
இதையும் படிங்க: தவெகவினர் செயலால் கடும் மன உளைச்சலில் விஜய்... தொண்டர்களுக்கு அதிரடி அட்வைஸ்!