தமிழகத்தில் தென் மாவட்டங்களில் அதிக அளவு பட்டாசு ஆலை உற்பத்தி செயல்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் கோவிந்தநல்லூரில் உள்ள கட்டனார்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி ஒரு குழந்தை, பெண்கள், ஆண்கள் என சுமார் 23 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டது. மீட்புபணியில் ஈடுப்பட்டு இருந்த காவல்துறையினர் 8 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியது.இந்த வெடி விபத்து சம்பவத்தை தாமாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த விபத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், தேனியில் மற்றொரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி கம்பம் நகரில் மேற்கு பகுதில் சுமார் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மலை அடிவாரத்தை ஒட்டிய காட்டு பள்ளிவாசல் பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. பெரியார் நகரைச் சேர்ந்த திருப்பதி என்பவருக்குச் சொந்தமான இந்த பட்டாசு ஆலையில் 5 இளைஞர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாக விடுமுறை விட்ட நிலையில் நான்கு நாள் விடுமுறைக்கு பின்பு இன்று காலை வழக்கம் போல் பட்டாசு தொழிற்சாலை பணியாளர்களான அய்யப்பன், நாகர்ஜுன், சூர்யா, தினேஷ் என்ற தீனா ஆகிய நான்கு பேரும் வழக்கம் போல் தொழிற்சாலைக்கு பணிக்கு வந்துள்ளனர் .
பட்டாசு தயாரிப்பதற்காக தினேஷும், சூர்யாவும் மூலப் பொருள்கள் வைத்திருக்கும் அறையினை திறந்து உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த அறையில் வெடி விபத்து ஏற்பட்டு அறையைத் திறந்த சூர்யாவும் தினேஷும் உடல் சிதறி பலியாகி உள்ளனர் .
இதனைப் பார்த்த அவர்களுடன் பணிபுரிய வந்த மற்ற இருவரும் வெடி சத்தம் கேட்டதை தொடர்ந்து வெளியே அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்துள்ளனர் .இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் சிதறி கிடந்த இறந்தவர்களின் உடற்பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அப்பகுதியில் தண்ணிரை பீச்சி அடித்து மேலும் வெடி விபத்து நடக்காமல் இருக்கும் பணியில் ஈடுபட்டனர் . இந்த விபத்து குறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உரிமையாளர் திருப்பதியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது . இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கம்பம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கொளுத்த போகுது வெயில்!! 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்! வானிலை மையம் அலர்ட்!
இதையும் படிங்க: தபால் ஓட்டு போட ஆர்வம் காட்டாத அரசு ஊழியர்கள்!! 19,600 பேர் ஆப்சென்ட்!! சென்னையில் மோசம்!