மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற பின்னர், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது முதல் உரையை நேற்று முன்தினம் மாநிலங்களவையில் ஆற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் போது நிகழ்த்தப்பட்ட இந்த உரை, தமிழ் மொழி, தமிழ் அடையாளம், வாக்குரிமை பாதுகாப்பு மற்றும் சில மத்திய அரசு நடவடிக்கைகள் குறித்த கடுமையான விமர்சனங்களுடன் அமைந்திருந்தது.
உரையைத் தொடங்கிய கமல்ஹாசன், தான் சினிமா உலகத்திலிருந்து வந்தவன் என்றும், தமிழ்நாட்டின் பரமக்குடி என்ற சிறிய ஊரிலிருந்து பயணித்து இந்த அவைக்கு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்தியா மாநிலங்களால் இணைந்த ஒரு கூட்டாட்சி நாடு என்ற அரசியல் சாசன வழிகாட்டுதலை நினைவூட்டினார். தனது தமிழ் மொழி அறிவையும் அடையாளத்தையும் ஆசிரியர்கள் மூலம் பெற்றதாகவும், அவர்களில் ஒருவராக சி.என். அண்ணாதுரை இருந்ததால், அண்ணா தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்த ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ளக் கற்றுக் கொடுத்தார் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அண்ணாவின் வழிகாட்டுதலால் தான் தமிழ் மொழியைப் புரிந்து கொண்டதாகவும், மகாத்மா காந்தி கோபமின்றி பேசுவதற்கும், பெரியார் தர்க்கத்துடன் சிந்திப்பதற்கும் உதவியதாகவும் குறிப்பிட்டார். தான் பொருளாதாரத்தில் பட்டதாரி இல்லை என்றாலும், ஒரு தமிழனாக தனக்கு கருத்து இருப்பதாகவும் வலியுறுத்தினார். உரையில் தமிழ் மொழி குறித்து மிக முக்கியமான பகுதி வந்தது. கடந்த ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய ஒரு கருத்தை மேற்கோள் காட்டி, தமிழ் மொழியை இழிவுபடுத்தும் வகையில் பேசப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். பெரியாரின் பெயரை இழுத்து, தமிழ் "பிச்சை எடுக்கவோ திருடவோ உதவாது" என்று கூறப்பட்டதை எதிர்த்து, "தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது" என்று கேள்வி எழுப்பி, தமிழ் மொழியின் கௌரவத்தை உயர்த்திப் பிடித்தார். தமிழ் என்றும் வளமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தி முடித்தார்.
இதையும் படிங்க: இப்படிப்பட்ட பேச்சுகளெல்லாம் தேவையா? திமுக எதிர்ப்பு! ஓட்டமெடுக்கும் திருமாவளவன்!
இந்த நிலையில் பாராளுமன்றத்தில் கமல்ஹாசனின் பேச்சு குறித்து விடுதலை சிறுத்தைகள் பற்றிய தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரான மனநிலை கொண்டவர்களுக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்திருப்பதாக தெரிவித்தார். கமல்ஹாசனுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். தமிழினமே கமல்ஹாசனை பாராட்டுகிறது என்றும் பாஜகவினர் வயிற்று எரிச்சலில் பிதற்றிக்கொண்டு இருப்பதாகவும் சாடினார்.
இதையும் படிங்க: தமிழ் கலாச்சாரம் அழிய தமிழ் நில மன்னர்களா காரணமா? ஸ்டாலினை கேட்க தெம்பு இருக்கா? திருமா.வுக்கு TTV கண்டனம்..!