• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மலை உச்சியில் தீபம் ஏற்றியே தீருவோம்! நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு தமிழிசை விடுத்த எச்சரிக்கை!

    விசில் சத்தத்திற்குப் பயந்து பொதுமக்கள் மத உணர்வை கொச்சைப்படுத்துவதா? தவெக அரசு மற்ற கட்சிகளில் இருந்து பிள்ளை பிடிப்பதை நிறுத்த வேண்டும் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 07 Jun 2026 11:37:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thiruparankundram Deepam Row: Former Governor Tamilisai Criticizes VCK Leader Vanni Arasu, Defends Citizen's Religious Sentiments.

    உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சுவாமி தரிசனம் செய்வதற்காகத் தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று வருகை தந்தார். சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்துத் தற்போதைய தவெக கூட்டணி அரசு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து மிகவும் காரசாரமான மற்றும் அனல் பறக்கும் பல முக்கிய விபரங்களை அதிரடியாக உடைத்துள்ளார்.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசின் அறிக்கைக்கு ஆதரவாக இரண்டு வருடங்களுக்கு முன்னால் என்ன நிலை இருந்ததோ அதுவே தொடரும் என்று சட்ட மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பேசியிருந்ததைச் சுட்டிக்காட்டித் தமிழிசை கடுமையாகத் சாடினார். அமைச்சர் நிர்மல் குமார் அவ்வாறு சொல்லியதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால், அவருக்கு அடிப்படையில் வெளிச்சமே பிடிக்காது; அதனால்தான் தற்பொழுது தமிழகம் முழுவதும் மின்தடை மற்றும் மின்வெட்டு அசுர வேகத்தில் தொடர்கிறது என்று  பழிதீர்த்தார்.

    தமிழிசை சௌந்தரராஜன்

    தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசைச் சாடிய தமிழிசை, மலை உச்சியில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்பும், நாங்கள் விளக்கு ஏற்ற மாட்டோம் என்று தவெக அரசு பிடிவாதம் பிடிப்பது மாபெரும் ஆணவத்தின் வெளிப்பாடு. தவெக-வுக்கு விசிக-வின் விசில் சத்தம் சற்றே சத்தமாகக் கேட்டுவிட்டது என்பதற்காக அரசு இவ்வாறு தன்னிச்சையாகப் பேசக்கூடாது. அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி, மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தார்மீகக் கோரிக்கை வைத்துள்ளார்கள். பொதுமக்களின் அசைக்க முடியாத இந்த உன்னத உணர்வை, மதவாத உணர்வு என்று வன்னி அரசு போன்ற Fringe Elements கொச்சைப்படுத்துவது அப்பட்டமான தவறு என்று கறாராகப் பிரகடனப்படுத்தினார்.

    இதையும் படிங்க: எதிர்பார்ப்போடு வந்த தவெக ஆட்சி எதிர்ப்போடு கிளம்பியிருக்கிறது..!! தமிழிசை விளாசல்..!!

    மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் இன்னும் போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா நடமாட்டம் தாராளமாக, அசுர வேகத்தில் புழக்கத்தில் உள்ளது. இன்று காலை பத்திரிகையைப் பார்த்தால் 7 பாலியல் குற்றங்கள் செய்திகள் அடுக்கடுக்காக வந்துள்ளன. இதுதான் தமிழகத்தின் தற்போதைய தலையெழுத்தா? 70 வயது முதிய பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது. அன்றைய மேடைகளில் முழங்கிய சிங்கப்பெண்கள் எல்லாம் தற்பொழுது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை என்று அனல் பறக்கக் கேள்வி எழுப்பினார்.

    முதலமைச்சர் விஜய் அவர்களின் புதிய நிர்வாகத்தை விமர்சித்த அவர், விஜய்யின் ஆட்சியில் இந்த 30 நாட்களில் அரசாங்கம் ஓடுவதற்கே தவெக திக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. பாலியல் பலாத்காரங்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் எனப் புகார்கள் குவிகின்றன; ஒவ்வொரு துறை அமைச்சரும் ஒவ்வொரு மாதிரி முரண்பாடாகப் பேசுகிறார்கள். இந்த அரசாங்கம் இனியாவது வெறும் விசில் சத்தத்தில் இருந்து மாறி அசலுக்கு வரவேண்டும். குறிப்பாக, மற்ற கட்சிகளில் இருந்து தலைவர்களை இழுக்கும் பிள்ளை பிடிக்கும் வேலையை விஜய் தம்பி உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் கட்சியில் என்றும் லட்சியவாதிகள் மட்டுமே உள்ளனர். பிற கட்சிகளில் லட்சக்கணக்கில் சேருகிறார்கள் என்பதை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தாமரையின் ஒரு இதழைக் கூட யாராலும் அசைக்க முடியாது என்று தீர்க்கமாக முழங்கினார்.

    வன்னியரசு மற்றும் காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் போன்றோரின் அநாகரீகக் கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு அலாதி முகம் இருக்கலாம், ஆனால் பாஜாகவில் நாங்கள் அப்படி இரட்டை வேடம் போடுவதில்லை.

    கம்யூனிஸ்டுகளும், தொல். திருமாவளவன் போன்ற கட்சியினரும் தற்பொழுது சுயநலத்திற்காக இரட்டை வேடம் போட்டுக் கொண்டு உலா வருகிறார்கள். அன்று நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவினர் ராகுல் காந்தியைத் தூக்கி வைத்துக் கொண்டாடினீர்கள்; தற்பொழுது தவெக அரசு அமைய வழிவகை செய்து, உங்களது முதுகில் குத்திவிட்டுச் சென்றுவிட்டார். இதைத்தான் நாங்கள் தேர்தலுக்கு முன்பே தீர்க்கமாக எச்சரித்தோம் என்று பேசி முடித்தார்.

    இதையும் படிங்க: காங்கிரஸின் சரித்திரமே துரோகம் தான்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

    மேலும் படிங்க
    ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்! திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் வைகோ ஆவேசம்!

    ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்! திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் வைகோ ஆவேசம்!

    தமிழ்நாடு
    38 மாவட்டங்களிலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வேன்! அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    38 மாவட்டங்களிலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வேன்! அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    தமிழ்நாடு
    திமுக கூட்டணி கிடையாது! ஓப்பனாக உடைத்து பேசிய சிபிஎம் பெ.சண்முகம்!

    திமுக கூட்டணி கிடையாது! ஓப்பனாக உடைத்து பேசிய சிபிஎம் பெ.சண்முகம்!

    தமிழ்நாடு
    போஸ் கொடுத்த முதல்வர்... இப்போது பொறுப்பேற்பாரா? மசாகான் டாக் விவகாரத்தில் அதிமுக காட்டம்!

    போஸ் கொடுத்த முதல்வர்... இப்போது பொறுப்பேற்பாரா? மசாகான் டாக் விவகாரத்தில் அதிமுக காட்டம்!

    தமிழ்நாடு
    சபாஷ்..!! உடைந்தது சாதி பாகுபாடு..!! 21 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை கிராமத்திற்கு கெத்தாக சென்ற அரசு பஸ்..!!

    சபாஷ்..!! உடைந்தது சாதி பாகுபாடு..!! 21 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை கிராமத்திற்கு கெத்தாக சென்ற அரசு பஸ்..!!

    தமிழ்நாடு
    ஜம்மு காஷ்மீரில் சோக சம்பவம்..!! தீயில் கருகி நாசமான 8 கடைகள்..!! கதறும் வியாபாரிகள்..!!

    ஜம்மு காஷ்மீரில் சோக சம்பவம்..!! தீயில் கருகி நாசமான 8 கடைகள்..!! கதறும் வியாபாரிகள்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share