திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ், அவரது மனைவி ஆனந்தி, மகள் தீக்ஷிதா ஆகியோர் திருநள்ளாறு கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலை விரிவாக்க பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்துடன் மூன்று பேரும் விழுந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் நாகராஜ் மற்றும் அவரது மனைவி உயிரிழந்த நிலையில் மகள் தீக்ஷிதா காலில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வரும் நிலையில், சம்பவம் குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: அரசு மருத்துவர்களை கண்காணிங்க..! மனித உரிமைகள் ஆணையம் கறார்..!

பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கணவன், மனைவி பலியான சம்பவம் குறித்து ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: 3 நாள் டைம்..! காவல்துறைக்கு கெடு.. தெய்வச்செயல் பிரச்சனையில் தலையிட்ட தேசிய மகளிர் ஆணையம்..!