திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு கலப்பட வழக்கின் தொடர்ச்சியாக துணை செயல் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் லட்டு கலப்பட நெய் வழக்கில் சிபிஐ விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சில ஊழியர்களின் வருமானத்திற்கு அதிகமாக உள்ள சொத்துக்கள் குறித்த சில தகவல்களை சிபிஐ, ஆந்திரப் பிரதேச லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பகிர்ந்து கொண்டது.
அதன் தொடர் நடவடிக்கையாக, அப்போதைய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டியின் தனிப்பட்ட உதவியாளரான (பி.ஏ.) கே. சின்ன அப்பண்ணா மீது, விசாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தால், 22.04.2026 தேதியிட்ட குற்ற எண் 07/ஆர்.சி.ஏ. - வி.எஸ்.பி. / 2026-இன் கீழ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேல் விசாரணை மற்றும் ஆதாரங்கள் சேகரிப்பின் பேரில் தற்போது ஏழுமலையான் கோயிலில் துணைச் செயல் அதிகாரியாக பணி புரியும் மெண்டு லோகநாதம் மீது, 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் (2018-இல் திருத்தப்பட்டபடி) பிரிவு 13(2) மற்றும் 13(1)(b)-இன் கீழ், குற்ற எண் 06/ ஆர்.சி.ஏ. - டி.சி.டி /2026-இன் கீழ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட துணை செயல் அதிகாரி லோகநாதம் கருணை அடிப்படையில் 01.02.1989 அன்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் மூத்த உதவியாளர், கண்காணிப்பாளர், உதவி நிர்வாக அதிகாரி எனப் பதவி உயர்வு பெற்று, தற்போது திருமலை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் துணை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் திருப்பதி மாவட்டம், யேர்பேடு மண்டலம், குண்டலகண்ட்ரிகா கிராமத்தைச் சேர்ந்த திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலின் துணை செயல் அலுவலருமான மெண்டு லோகநாதம் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே தீயாய் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... தமிழகம் முழுவதும் 40+ இடங்களில் ரெய்டு... பின்னணி என்ன?
விசாரணையின் ஒரு பகுதியாக, திருப்பதியில் உள்ள அவரது மற்றும் உறவினர்களின் வீடு உட்பட 4 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளின் போது, சொத்து ஆவணங்கள் உட்பட குற்றத்தை நிரூபிக்கும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. திருப்பதி பி.கே. லேஅவுட்டில் ஒரு வீட்டுக் கட்டிடத்தை வாங்கி, அதைத் தன் மனைவியின் பெயரில் பதிவு செய்துள்ளார். திருப்பதி நகரம், கொல்லவானிகுண்டா குடியிருப்புப் பகுதியில் ஒரு கட்டிடத்துடன் கூடிய 2 வீட்டு மனைகளை வாங்கி, அதைத் தன் மனைவியின் பெயரில் பதிவு செய்துள்ளார் திருப்பதி மாவட்டம், வடமாலப்பேட்டை மண்டலம், பாதிரேடு ஆரண்யம் கிராமத்தில் ஒரு வீட்டு மனையை வாங்கியுள்ளார்.
திருப்பதி நகர்ப்புறத்தின் சீனிவாச நகர் குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டு மனையை வாங்கி, அதைத் தன் மகனின் பெயரில் பதிவு செய்துள்ளார். அவரது மகனின் பெயரில் 04 நிலையான வைப்புத்தொகைகள் உள்ளன. மைத்துனர்களின் வீடுகளில் மேலும் சோதனைகள் நடத்தப்பட்டதில் மனைவி மற்றும் பிறரின் கூட்டுப் பெயரில் உள்ள 31.98 லட்சம் மதிப்புள்ள ஒரு சொத்து ஆவணம் கண்டெடுக்கப்பட்டது.
மேலும் தங்கம் - 2 கிலோ, ரூ 12.5 லட்சம், வெள்ளி - 6.5 கிலோ கண்டெடுக்கப்பட்டது.
மொத்த சொத்துக்களின் மொத்த மதிப்பு (தோராயமாக) ரூ.5 கோடி இருப்பதும் மேலும் தொடர் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான எந்தவொரு சம்பவத்தையும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடமோ அல்லது ஊழல் தடுப்புப் பிரிவின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ புகாரளிக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1064 அல்லது ஊழல் தடுப்புப் பிரிவு கைபேசி எண் 9440440057 அல்லது ஊழல் தடுப்புப் பிரிவு மின்னஞ்சல் முகவரி: complaints-acb@ap.gov.in.
புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?