திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் அனிபா தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பிரதான கோரிக்கையாக திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் சுழற்சி முறையில் ஆட்டோ நிறுத்துவது குறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு கோட்டாட்சியர் நடத்திய சமாதான பேச்சு வார்த்தையில் சுழற்சி முறையில் ஆட்டோ கலை நிறுத்த வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது இதனை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோட்டாட்சியர் அலுவலக கேட்டை போலீசாரை மீறி திறந்து உள்ளே சென்றனர். வளாகத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . அவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர் .அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அவர்களை துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் பிடித்து பேருந்தில் ஏற்றினர். அப்போது திடீரென போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதில் துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் சீருடையில் இருந்த விசில் ரோப் கயிறை பிடித்து ஆட்டோ ஓட்டுநர்கள் இழுத்ததில்  அறுந்தது. மேலும் போலீசார் மீது கடுமையாக ஆட்டோ தொழிலாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர் . உடனடியாக போலீசார் அவர்களை கைது  செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். ஆட்டோ தொழிலாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நீங்க கேட்ட காசு கொடுத்துட்டோமே?  எங்கள ஏன் தடுக்குறீங்க?  அமெரிக்க து. அதிபரை வெளுத்து வாங்கிய மாணவி! 
இதையும் படிங்க: கோர்ட் உத்தரவை மதிக்கமாட்டீங்களா? தூங்குறீங்களா? தெருநாய்கள் விவகாரத்தில் சூடான நீதிபதிகள்!