பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. தீவிரவாதத்தை ஒழிக்கும் நோக்கில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் பற்றி என ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் உறுதுணையாக இருப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து தி.மு.க. செய்தி தொடர்பு குழு தலைவர் டி கே எஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும் என கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐந்தாம் ஆண்டில் மு.க. ஸ்டாலின் ஆட்சி.. திராவிட மாடலின் சாதனை குவியல்.. புகழ்ந்து தள்ளும் கி.வீரமணி!

மக்களின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாக உள்ளது என்று கூறிய அவர், நாகரீக சமூகத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்திய அரசின் எந்த ஒரு நடவடிக்கையும் தாங்கள் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நேற்று கட்சி தொடங்கியவன் எல்லாம் அடுத்த முதல்வர் என்கிறான்..! மு.க.ஸ்டாலின் வேதனை..!