திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் என்பது ஐந்து பஞ்சபூத தலங்களில் அக்னி லிங்கமாக விளங்கும் தலம். மலையே சிவபெருமானாக அருள்பாலிக்கும் இடம் என்பதால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் என்று வீடுகளில் கொண்டாட்டங்கள் நடக்கும்போதே, இங்கு திருவூடல் உற்சவம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மாட்டுப்பொங்கல் அன்று நந்தி பகவானுக்கு பழங்கள், பூக்கள், இனிப்புகள் கொண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்படும். பிறகு, அண்ணாமலையாரும் உண்ணாமுலையம்மனும் திருவீதியுலா வருவார்கள். இதைத் தரிசிக்க மட்டும் ஆயிரக்கணக்கானோர் குவிவார்கள்.இந்த வருடம் 2026-ல் தைப்பொங்கல் ஜனவரி 15-ஆம் தேதி வியாழக்கிழமை வந்தது. ஏற்கனவே மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனத்தின்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதியிருந்த நிலையில், பொங்கல் காலகட்டத்தில் இன்னும் அதிகரித்துள்ளது.

கோவில் வெளிப்பிரகாரம் வரை நீண்ட வரிசைகள், சில சமயங்களில் ஒரு கிலோமீட்டருக்கு மேல் நீளும். காலை முதல் இரவு வரை தரிசனத்துக்காக காத்திருப்பவர்கள், கிரிவலம் வருபவர்கள், உற்சவ தரிசனத்துக்காக வந்தவர்கள் என கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களோடு பொங்கல் விடுமுறை சேர்ந்தால், நகரமே பக்தர்களால் நிரம்பிவிடும். காணும் பொங்கல் பண்டிகை தினத்தை ஒட்டியும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதையும் படிங்க: விவசாயி வேஷம் போட்டு அரசியல் செய்வாங்க... விவசாய எதிர்ப்பு சட்டத்தையும் ஆதரிப்பாங்க... சூசகமாக பேசிய முதல்வர்...!
அண்ணாமலையாரை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இதற்கிடையில், பக்தர்கள் வரிசையில் சிலர் குறுக்கு வழியில் நுழையும் முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் குறுக்கு வழியில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். வரிசைக்குள் வரக்கூடாது எனக் கூறி வாக்குவாதம் செய்த நிலையில் முற்றியது. போலீசார் தடுத்து நிறுத்த முயன்றும் குறுக்கு வழியில் நுழையும் முயன்றவர்களால் சலசலப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதால் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இதையும் படிங்க: விவசாய திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடி... திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...!