தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) காலை தொடங்கியது. மாநிலம் முழுவதும் நடைபெற்றுவரும் இந்தத் தேர்வை எழுதுவதற்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் தேர்வு மையங்களுக்குச் சென்றுள்ளனர்.
846 காலிப் பணியிடங்கள் – 4.90 லட்சம் தேர்வர்கள்!
குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பிரிவுகளில் காலியாக உள்ள மொத்தம் 846 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு சுமார் 4.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதையும் படிங்க: குரூப் 1 தேர்வர்களின் கவனத்திற்கு.. வெளியானது உத்தேச விடைப் பட்டியல்..!!
காலியாக உள்ள 846 பணியிடங்களுக்கு 4.90 லட்சம் பேர் போட்டியிடுவதால், சராசரியாக ஒரு பணியிடத்துக்கு 579 பேர் என்ற விகிதத்தில் போட்டி அமைந்துள்ளது. அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் பல மாதங்களாகத் தயாராகி வந்த தேர்வர்கள் இந்த முதல்நிலைத் தேர்வை எதிர்கொண்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 1,647 தேர்வு மையங்கள்!
இந்தத் தேர்வு மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,647 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கிய முதல்நிலைத் தேர்வு நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ளன.
846 பணியிடங்களுக்காக 4.90 லட்சம் பேர் தேர்வெழுதும் நிலையில், முதல்நிலைத் தேர்வில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடுத்தகட்டத் தேர்வு வாய்ப்பைத் தீர்மானிக்கும் என்பதால் இந்தத் தேர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நாளை வெளியாகிறது குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு..!! 10,000 காலி பணியிடங்கள் எதிர்பார்ப்பு!!