பகல்காம், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபல சுற்றுலாத் தலமாகும். "மினி-ஸ்விட்சர்லாந்து" என்று அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கு, அடர்ந்த பைன் காடுகளால் சூழப்பட்டு, இயற்கை அழகு மற்றும் அமைதியின் அடையாளமாக விளங்குகிறது. இந்தப் பகுதி, அமர்நாத் யாத்ரையின் தொடக்கப் புள்ளியாகவும் உள்ளது, இதனால் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.காஷ்மீர் பிராந்தியம், 1947 இல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே உரிமைப் போராட்டத்தின் மையமாக உள்ளது.
2019 இல், இந்திய அரசு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை (பிரிவு 370) ரத்து செய்து, மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இந்த முடிவு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளால் "மக்கள்தொகை மாற்றம்" என்று குற்றச்சாட்டப்பட்டு, பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்தது. இந்தப் பின்னணியில், பகல்காம் தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 26 அப்பாவிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.

இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்கள் உள்ளிட்டவற்றை நடத்திக் கொண்டன. இறுதியில் சமரசம் எட்டப்பட்டு தாக்குதல் நிறுத்திக் கொள்ளப்பட்டது. பகல் கம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பகல் காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்க வேண்டும் என்று டி.ஆர் பாலு வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுல TRB ராஜா நடமாட முடியாது.. ஆர். பி. உதயகுமார் பகிரங்க எச்சரிக்கை..!
மக்களவை திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி ஆர் பாலு செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார். இந்தியா பாகிஸ்தான் போர் தான் கூறியதால் நிறுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் விவரத்தை தெளிவாக விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மழைக்கால கூட்டத் தொடர்: என்னென்ன செய்யணும்? திமுக எம்.பிகளுக்கு முதல்வர் அறிவுரை..!