புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தொழில்நுட்பக் கோளாறால் தரை இறக்கப்பட்ட சிறிய ரக பயிற்சி விமானத்தால் பரபரப்பு.
சேலம் மாவட்டத்தில் உள்ள Ekvi air training organisation pvt ltd என்ற தனியார் விமான பயிற்சி மையத்திலிருந்து செஸ்னா என்ற சிறிய ரக பயிற்சி விமானம் சேலத்தில் இருந்து காரைக்குடிக்கு வான் வழியாக சென்று விட்டு பின்னர் வான் வழியாக புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பகுதியில் வந்த போது சிறியரக விமானத்தின் முன்பக்க இறக்கை மற்றும் பாகங்கள் சேதமடைந்து கீழே விழுந்ததால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் விமான பயிற்சியாளர் ராகுல் மற்றும் விமான பயிற்சி மாணவன் ஹாசிர் ஆகிய இருவர் இருந்த நிலையில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அறிந்த விமானி ராகுல் உடனடியாக பயிற்சி விமானத்தை அம்மா சத்திரம் கிராமத்தில் திருச்சி காரைக்குடி நெடுஞ்சாலையில் வாகனங்கள் எதுவும் வராத நேரத்தில் சாதுரியமாக தரையிறக்கி உள்ளார். விமானி சாதுரியமாக செயல்பட்டு சாலையில் விமானத்தை தரை இறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: கோவை டூ டெல்லி கார் குண்டு வெடிப்பில் இப்படியொரு தொடர்பா?... தமிழகத்தின் பக்கம் பார்வையைத் திருப்பும் NIA...!
விமானம் திடீரென்று தரையில் இறங்கியதை பார்த்த அப்பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக தரை இறக்கப்பட்ட விமானத்திற்கு சென்று விமானத்தில் உள்ளவர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதை பார்வையிட்டு பின்னர் உடனடியாக சாலையின் நடுவே இருந்த விமானத்தை 150 அடி தூரம் தள்ளி சென்று சாலையின் ஓரம் நிறுத்த உதவி செய்தனர்.
மேலும் இந்த விமானத்தில் பயணித்த விமானி உள்ளிட்ட இருவரும் எந்தவித காயமும் இன்றி உயிர்த்தப்பினர்.
பின்னர் சிறியரக பயிற்சி விமானத்தில் இருந்து சேதமடைந்து விழுந்த பாகங்களை நார்த்தாமலை அருகே உள்ள மஸ்தான் கூடம் என்ற பகுதியில் இருந்து சேகரித்து வந்து விமானம் அருகே வைத்த நிலையில் தரை இறக்கப்பட்ட விமானத்தில் எரிவாயு கசிவு இருந்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் அப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. பின்னர் கூடியிருந்த கூட்டத்தை காவல்துறையினர் கட்டுப்படுத்திய நிலையில் திருச்சி விமானத்துறை இயக்குனர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தரையிறக்கப்பட்ட விமானத்தை பார்வையிட்டு பின்னர் அந்த விமானத்தில் வந்த விமானி மற்றும் பயிற்சி மாணவன் ஹாசிர் ஆகிய இருவரையும் பாதுகாப்பாக அப்பகுதியில் இருந்து அழைத்துச் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி விமான நிலைய இயக்குனர் ராஜ்குமார்: சேலம் மாவட்டத்தில் உள்ள தனிதான் விமான பயிற்சி மையத்தில் இருந்து தான் விமானம் வந்ததாகவும் வான் வழியாக காரைக்குடி வரை சென்று விட்டு மீண்டும் சேலம் நோக்கி செல்லும் பொழுது தான் இந்த சம்பவம் நடந்ததாகவும் அருகே முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் திருச்சி விமான நிலையம் உள்ள நிலையில்
திருச்சி மாநாடு நிலையம் வரை சென்றால் விமானம் பாதுகாப்பாக தரையிறக்க முடியாது என்பதை உணர்ந்துதான் சாதுரியமாக செயல்பட்டு விமானி ராகுல் சிறிய ரக பயிற்சி விமானத்தை தரை இறக்கி உள்ளதாகவும் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் மேலும் டிஜிசிஏ அதிகாரிகள் வருகை தந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்
அந்த ஆய்வில் முழு விவரமும் தெரியவரும் குறிப்பாக சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனத்திற்கு உரிமம் உள்ளதா முறையாக பாதுகாப்பு முறைகளை கையாண்டு தான் இந்த விமானம் இயக்கப்பட்டதா? விமானம் எடுக்கும் பொழுது அனைத்து பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டதா விமானம் எதனால் உடனடியாக சாலையில் தரையிறக்கப்பட்டது
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்ன விமானத்தை சாதுரியமாக விமானிதர இறக்கியதால் எது மாதிரியான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்றெல்லாம் தெரியவரும் மேலும் அவர்கள் ஆய்வு செய்த பிறகு இங்கிருந்து விமானம் எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் தரையிறக்கப்பட்ட விமானத்தை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் தொடர்ந்து அந்த பகுதியில் பொதுமக்கள் குவிந்து வருவதால் காவல்துறையினர் தற்பொழுது தடுப்புகள் அமைத்து விமான இருக்கும் பகுதியை பொதுமக்கள் நெருங்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தேமுதிக யாருடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரேமலதா…!