திருச்சியில் காவலர் குடியிருப்புக்குள் வைத்து இளைஞர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி பாலக்கரையை சேர்ந்த தாமரைச்செல்வன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் சதீஷ் என்பவருக்கும் கமிஷன் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. சதீஷை தாமரைச் செல்வன் அடித்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் தனது நண்பர்களான பிரபாகரன், கணேசன், நந்து உள்ளிட்ட ஐந்து பேருடன் சேர்ந்து இன்று காலை தாமரை செல்வன் அலுவலகம் செல்லும் வழியிலேயே அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார்.
இதனால், அதிர்ச்சியடைந்த தாமரை செல்வன், அவர்களிடமிருந்து தப்பிக்க அருகிலிருந்த காவலர் குடியிருப்புக்குள் சென்று அங்குள்ள வீட்டிற்குள் சென்றுள்ளார். ஆனால், அவரை துரத்தி சென்ற கும்பல் சரமாரியாக தாமரை செல்வனை வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து, தகவலறிந்த வடக்கு துணை ஆணையர் சிபின் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: "வேற வேலையில்ல..." - எடப்பாடி பழனிச்சாமியை படு பங்கமாய் நோஸ் கட் செய்த ஸ்டாலின்...!
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளமாறன் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற நான்கு பேரும் தலைமறைவாக இருந்தனர். இந்த நிலையில் பாலக்கரை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு,சதீஷ், கணேஷ், நந்து, பிரபாகரன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: தகாத வார்த்தைகளால் கோயில் பூசாரிக்கு அர்ச்சனை... அடாவடி செய்த அரசு பேருந்து நடத்துனருக்கு நேர்ந்த பரிதாபம்...!