டிடிஎஃப் வாசன் (TTF Vasan) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபலமான யூடியூபர், மோட்டோ விலாக்கர் (Moto Vlogger) மற்றும் சமூக ஊடக ஆளுமையாவார். இவரது உண்மையான பெயர் வாசன், ஆனால் "டிடிஎஃப் வாசன்" என்ற பெயரில் தமிழ்நாட்டின் இளைஞர்கள் மத்தியில் பரவலாக அறியப்படுகிறார். இவர் தனது யூடியூப் சேனலான Twin Throttlers மூலம் புகழ் பெற்றவர்.
இவரது வீடியோக்கள் முக்கியமாக மோட்டார் பைக்குகளைப் பயன்படுத்தி பயணம் செய்யும் விலாக்கிங் (vlogging), சாகசங்கள் மற்றும் அவரது தினசரி வாழ்க்கையைப் பற்றியவை. இவரது எளிமையான பேச்சு, உள்ளூர் மொழி பயன்பாடு மற்றும் இளைஞர்களுடன் இணைவதற்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் ஆகியவை இவரை பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட ஒரு ஆளுமையாக மாற்றின.

அதே நேரத்தில் பல வழக்குகளை சந்தித்து சர்ச்சைகளிலும் டிடிஎஃப் வாசன் சிக்கி உள்ளார். சில படங்களில் நடித்ததுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ஒரு பெண்ணை இவர் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஐந்து வருடமாக வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது மாமன் மகளை ஐந்து வருடமாக காதலித்து திருமணம் செய்திருப்பதாக டிடிஎஃப் வாசன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: தொடரும் ட்ரம்பின் அடாவடி! இந்தியா மீது அபாண்ட பழி! சீனா, பாக்., நாடுகளுடன் மட்டம் தட்டிய அமெரிக்கா!
தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. குறிப்பாக தனது மனைவியின் காலில் மெட்டி போடுவது போன்ற புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. தொடர்ந்து டிடிஎஃப் வாசனுக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் மேகவெடிப்பு!! அடுத்தடுத்து இடிந்து விழுந்த வீடுகள்! உத்தராகண்டில் தொடரும் சோகம்!! 5 பேர் மாயம்!