அமமுக கட்சி 2018-ல் ஜெயலலிதாவின் பெயரை முன்னிலைப்படுத்தி, அவரது கொள்கைகளைத் தொடர்வதாக அறிவித்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், பின்னர் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்தது. ஆனால் 2025 செப்டம்பரில், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியை பாஜக ஆதரிப்பதாகக் கருதி, என்டிஏவிலிருந்து விலகியது.
இதனால் சில காலம் தனித்து நின்றது அல்லது வேறு வழிகளை ஆராய்ந்தது.ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, குறிப்பாக ஜனவரி மாதத்தில், பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. டெல்லியில் அமித்ஷா உள்ளிட்டோருடன் சந்திப்புகள், அதிமுக தலைமைக்கு ஒப்புதல் பெற்ற பிறகு, டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்தினார்.

நல்லாட்சி கொண்டு வருவதற்காக இணைவதாக அறிவித்தார். இதன்மூலம் அதிமுக தலைமையிலான என்டிஏவில் அமமுக இடம்பெற்றுள்ளது. ஜனவரி 23 அன்று பிரதமர் மோடி கலந்துகொள்ளும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் அமமுக பங்கேற்கும் என கூறப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் NDA கூட்டணியில் இணைவதாக அறிவித்த டிடிவி தினகரன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்தித்தார்.
இதையும் படிங்க: 2026ல் NDA ஆட்சி தான்… ஊழல் திமுக ஆட்சியை அகற்றுவோம்… பியூஷ் கோயல் சூளுரை…!
இந்த சந்திப்பு நிகழ்வின்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன் உட்பட ஏராளமான பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர். என் டி ஏ கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனுக்கு பியூஸ் கோயல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஆறு முதல் பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க: EPS - பியூஷ் கோயல் சந்திப்பு நிறைவு... பேச்சுவார்த்தையில் சுமூகம்.. - நயினார்...!