தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலுரை எனும் பெயரில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய ஆட்சிக்காலத்தில் கோடிக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியை அமைக்க தமிழக மக்கள் முடிவு செய்து விட்டதாகவும் பேசி இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் மாநாடு போன்ற பொதுக்கூட்டமும், திமுகவுக்கு எதிரான தமிழக மக்களின் எழுச்சியும் முதலமைச்சர் ஸ்டாலினை எந்தளவிற்குப் பதற்றமடையச் செய்திருக்கிறது என்பதை அவரின் இன்றைய சட்டமன்ற உரை தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது என்று கூறினார்.

இந்தியாவின் அண்டை மாநிலங்களுடன் தமிழகத்தை ஒப்பிட்டு திமுக அரசின் சாதனைகளை அடுக்கு மொழியில் அடுக்கிய முதலமைச்சர் ஸ்டாலின் சிலவற்றை மறந்து விட்டதாகவும், அவற்றை தான் சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுகளை தினகரன் பட்டியலிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டிடிவி- க்கு பயம்... NDA இயற்கைக்கு முரணான கூட்டணி..! செல்வப்பெருந்தகை விமர்சனம்..!
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வரிகளும், கட்டணங்களும் பன்மடங்கு அதிகரிப்பு, இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தோல்வி, கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள், அனைத்து துறைகளிலும் ஊழல் மற்றும் முறைகேடு புகார், வெளிப்படைத் தன்மை இல்லாத அரசு நிர்வாகம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை டிடிவி தினகரன் முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: கஞ்சா போதையால் கொடூர கொலைகள்... சீரழியும் இளைய தலைமுறை... டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..!