வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவன்..! பட்டப் பகலில் அறிவாளால் வெட்டப்பட்ட கொடூரம்..!

ஶ்ரீவைகுண்டத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவரை அறிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் திருநெல்வேலியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று பொதுத்தேர்வு எழுதுவதற்காக தனது கிராமத்திலிருந்து திருநெல்வேலி நோக்கி பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார் தேவேந்திரன். அப்போது, கெட்டியம்மாள்புரம் அருகே பேருந்து சென்றுக் கொண்டிருந்த போது 3 பேர் பேருந்தை வழிமறித்து உள்ளனர்.

இதையும் படிங்க: தேர்வன்று திடீரென உயிரிழந்த தாய்.. மனதை ரணமாக்கிய மாணவனின் செயல்..!

மாணவர் தேவேந்திரனை பேருந்தில் இருந்து இழுத்து வெளியில் தள்ளியுள்ளனர். பின்னர் கையில் வைத்திருந்த அரிவாளால் தேவேந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிடவே அந்த கும்பல் தப்பி ஓடியுள்ளது.

பின்னர் தேவேந்திரனை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கபடி விளையாடுவதில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மாணவனை வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 சிறார்களை போலீசார் கைது சேட்டு விசாரித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகும்… கதறும் பெற்றோர்!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी