கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் இன்று விசாரணைக்கு வந்தது. பொதுநல மனுக்களுக்கு சாதகமாக கரூர் சம்பவம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதாக கூறி மனுவை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர்.
அரசியலுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை கேட்கட்டும் எனவும் தெரிவித்து சிபிஐ விசாரணை கேட்ட அனைத்து பொது நலமான மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். இந்த நிலையில், முன்ஜாமின் கூறி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தது. புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமின் மனுவை தள்ளி வைக்க போலீசார் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அப்போது, சொந்த கட்சி தொண்டர்களை கொலை செய்யும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று புஸ்ஸி ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது. தாமதமாக வந்தது குற்றமா எனவும் கேட்கப்பட்டது. விஜயை பார்க்கக் கூடியவர்களை காவல்துறை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும் என்றும் போலீஸ் மீது பழி போடவில்லை குற்றம்தான் சுமத்துகிறோம் என்று கூறப்பட்டது.
இதையும் படிங்க: விஜய் மேல CASE போடல! வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்...!
வேலுச்சாமிபுரம் சரியான இடம் இல்லை என நினைத்திருந்தால் அனுமதி மறுத்திருக்க வேண்டும் என்றும் எங்குமே போலீசார் பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்திற்குள் ரவுடிகள் புகுந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் கூட்டம் நிற்கும் இடத்தில் ஏன் லத்தி சார்ஜ் நடத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: சம்மன் கொடுத்தும் வரல! தவெக நிர்மல் குமார் எங்கே? வலைவீசி தேடிவரும் போலீஸ்...!