சென்னை அரும்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்தபின் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழக வெற்றிக்கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கம் பகுதியில், நடுத்தர வயதுப் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது. தலைநகரிலேயே அரங்கேறியுள்ள இத்தகைய கொடூரம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பதற்கு ஒரு கண்கூடான சான்று என்று கூறியுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் படுகொலைகள், வழிப்பறிகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் எனத் தொடர்வதால், பொதுமக்கள் வாழப் பாதுகாப்பற்ற இடமாக மாநிலம் மாறியுள்ளது என்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையோ, உரிமைகளுக்காகப் போராடும் மக்களை ஒடுக்குவதிலும், ஆட்சியாளர்களின் ஏவற்படையாகவும் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருப்பது வேதனையானது எனவும் தெரிவித்துள்ளது.

மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கத் தவறிய முதலமைச்சர் ஸ்டாலின், வழக்கம் போல் விளம்பரங்களில் திளைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் அமைதியான, பாதுகாப்பான சூழலில் அச்சமின்றி வாழ்வதுதான் ஒவ்வொரு சாமானிய மனிதனின் கனவு. அந்த எளிய கனவைக் கூட நிறைவேற்ற முடியாத திமுக அரசு, கோடி கோடியாய்ச் செலவு செய்து வெற்று விளம்பரங்களிலும், செயல்பாட்டிற்கு வராத திட்டங்களிலும் மட்டுமே கவனம் செலுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் சாடியது.
இதையும் படிங்க: விஜய் கிட்ட பேசிக்கலாம் கம்முனு இருங்க... காரை வழிமறித்த நிர்வாகிகளை அமைதிப் படுத்திய நிர்மல் குமார்...!
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத, சட்டம் ஒழுங்கைக் காக்கத் திறனில்லாத இந்த மக்கள் விரோத அரசு நீடித்தால், தமிழகம் அமைதிப் பூங்காவிலிருந்து மாறி, மக்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாகச் சீரழிவதைத் தவிர்க்க முடியாது என்றும் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: சிபிஐ விசாரணை வளையத்தில் விஜயின் பிரச்சார வாகனம்... தடயவியல் துறை அதிகாரிகள் தீவிர சோதனை...!